-செண்பக ஜெகதீசன்
முக்கண்ணனின் மூத்த பிள்ளை 
முக்கனியும் விரும்பும் பிள்ளை,
திக்கெங்கும் நிறைந்த பிள்ளை
தீதெல்லாம் அகற்றும் பிள்ளை,
எக்கணமும் அருளும் பிள்ளை
எளியவர்க்கும் ஏற்ற பிள்ளை,
அக்கறையாய் அவனைப் பணிவாய்
ஆனைமுகன் அருள்வான் இனிதே…!

Leave a Reply