-ருத்ரா
காதல்
இதைக்
கீறாத நிப்புமுனைகள்
எழுத்துலக அனாதைகள்.
மயில் இறகு
சவப்பெட்டியின் மேல் கூட 
இது இருக்கலாம்.
காதலின் சாவுக்கு அடையாளமாய்.
சன்னல்
போதும் நிலவை எட்டிப்பார்த்தது.
வாங்கு உடனே ஒரு
விண்டோ 8 வெர்ஷனை.
தூது
கணினியுக தமயந்திக்கு
விரல்வழியே டெக்ஸிட
இருபத்தாறு அன்னங்கள்.
ஈசிஆர் சாலை
ஜல்லியும் தாரும் போட்டாலும்
வளையல்களும் மதுக்கிண்ணங்களுமே
நொறுங்கிக்கிடக்கும் சாலை இது.
டைட்டல் பார்க்
கூவத்தின் கரையெல்லாம்
கரன்சிகளில் கட்டிய
“ப்ளாஸா”க்கள்.

Leave a Reply