அன்புடன் ஒரு மடல்
அமைதிச் சாரல்
பிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,
நமதானபோது
பிரிவென்னும் சுனாமி
புரட்டிப்போட்டது நம்மை..
ஓருயிராயிருந்த
ஈருடலிலொன்று..
விட்டுச்சென்ற வெறுங்கூட்டில்,
சடசடத்தடங்கும்
எண்ணப்பறவைகளின் சிறகுகள்
வருடிக்கொடுக்கின்றன
குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை..
வண்ணமிகு எனதுலகின்
அத்துணை ஜன்னல்களிலும்,
இருட்டின் வாசம் வீச விட்டுவிட்டு,..
உன்னில் நானடக்கமென்பதை
சொல்லாமல் சொல்கிறதடா நம்பெயர்
என்று,
இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய்
காயத்துக்கு மருந்தாக..
நாளை வரை காத்திருக்க
நானொன்றும் ராமனல்ல;
வந்துவிடு சீக்கிரம்…
‘உனதும் எனதுமாய்
பிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,
நமதாக சங்கமம் ஆகிவிடும்
மறந்தும், இனி பிரியாது.’