ஓவியானந்தம்
தி. சின்னராஜ்
நீர் ஆனந்தம், நிலம் ஆனந்தம், வனம் ஆனந்தம்,வானம் ஆனந்தம், அதை வரைவதில் பேரானந்தம் அடைகிறார் ஓவியர் ஆனந்த். சென்னை, மேற்கு மாம்பலம், எண்-14 ராஜகோபாலன் சாலையில் ஓவியக்கூடம் அமைத்து ஓயாமல் இயற்கையை வரைந்து வருகிறார். ஆனந்த் சிறு வயதில் கண்ணாடித் துண்டுகளை கலைடோஸ்கோப் மூலம் பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்த நினைவுகளை இன்று தன நவீன அரூப ஓவியங்களில் இயற்கை கலந்து தருகிறார். ஆறு முறை தனிக் கண்காட்சியும் , பல முறை குழுக் கண்காட்சியும் நடத்தியுள்ள இவர் மத்திய , மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார். கலாக்ஷேத்ரவின் நுண்கலை பட்டயதாரியான இவர் துரிகையை விட கத்தி , வட்டிகை பயன்படுத்தியே வரைவது ஆனந்தின் சிறப்பு. இதோ அவரின் ஓவியங்கள்…