கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வசீகரன். இளம் வயதிலேயே கேமரா மீது ஆர்வம் கொண்டதன் விளைவு தனது கிராமத்தில் பார்க்கும் காட்சியையெல்லாம் படம் பிடித்து விடுகிறார். கடந்த ஆண்டு தண்ணீர் சேமிப்பு பற்றிய இவரின் குறும்படம் சேலத்தில் நடந்த SIGNIS சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசை வென்றது. விஸ் காம் பயில பிரியப்படும் இவரின் காமிரா கிளிக்கிய கவிதைகள் இங்கே..
என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்கு குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத்தூரிகைகளால் வரைந்து சுருக்கிவிட விட முடியாது. வானம் என்னும் திரையில் தோன்றும் குழந்தைகளின் கற்பனைகள் பால் வெளி நோக்கியும் பயணிக்கும் வல்லமை படைத்தவை. சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நாம். வண்ணம், வடிவம், எண்ணம், எழுத்து எல்லாமே என் பிரியமுள்ள குழந்தைகள். அவர்களுக்கு வாழ்த்து சொல்லவே விருப்பம்.
VAALTHUKKAL VASEEKARAN
SJN FRIENDS