நான் அறிந்த சிலம்பு – 150
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை
சுருங்கை வீதி வழியாகச் செல்லுதல்
வேலி சூழ்ந்த காவல் காட்டுடன் பொருந்தி
வளைந்த நீர்ப்பரப்புடைய அகழியின்கண்
பெரிய தும்பிக்கையுடைய யானைகள்
போக்குவரத்து செய்வதற்கு வசதியாக அமைத்த
சுருங்கையுடைய வீதியைக் கடந்துபோய்
மதில் வாயிலைக் கடந்து, அகநகரின் எல்லையைச் சார்தல்
அச்சம் விளைவிக்கும் மதில் வாயிலைக்
காக்கும் தொழிலால் சிறப்புப் பெற்ற
கொல்லும் தொழில் புரிகின்ற
வாளைக் கையில் ஏந்திய யவனர் கண்படாது
ஆயிரம் கண்களையுடைய இந்திரனின்
பெறுவதற்கரிய அணிகலன்களை வைத்திருக்கின்ற
பேழையின் வாய் திறந்தாற்போல விளங்கும்
மதிலின் உள்ளே இருக்கும் அந்நகரின் எல்லைக்கண்
கடை கழி மகளிரின் பொழுது போக்கு, காலைப் பொழுதைக் கழித்தல்
மேற்கிலிருந்து காற்று வீசுவதால்
கொடிகள் அசைகின்ற மறுகின்கண் உள்ள
பெண்டிர்க்கென்று வகுக்கப்பட்ட எல்லையைக் கடந்த
பொது மகளிர்,
தம்மீது காதல் கொண்ட செல்வந்தரான இளைஞர்களுடன்
எப்போதும் இடைவிடாது நீர் வற்றாது காணப்படும்
வைகை ஆற்றின் ஓங்கிய திருமருதத்துறையின் முன்
விரிந்து பரந்து பொலிவுடன் விளங்குகின்ற
ஆற்றிடைக்குறையின் வெண்மணல் உடைய
அடைகரைக்கண் உயர்ந்த ஓடங்களோடு
தோணிகளை ஏறிச் செலுத்தியும்
பொலிவுபெற்ற தெப்பத்தில் நீந்திப்
புனலாடுதலை விரும்பி…
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 63 – 75
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–
படத்துக்கு நன்றி:
http://tamilpandal.blogspot.in/2014/05/10.html