பொங்கலோ பொங்கலென்று இன்பம் பொங்க கூடிடுவோம்!

-கவிஞர் காவிரிமைந்தன்

உலகம் தழைக்க உழைக்கும் மாந்தர்
வாழ்வில் வரும் ஒருநாள்!
உயிர்கள் பிழைக்க உணவைத் தரும்                 kaviri1
உழவர் காணும் திருநாள்!
உடன்தான் உழைக்கும் மாடுகள்
கூடவே காணும் பெருநாள்!
செங்கதிரோன் பங்களிப்பில்
பச்சைவயல் காட்சிதர…
நம்குலத்து நாயகர்கள்
நாளும் உழவு செய்ய
புதுப்பானை வண்ணம்தீட்டி
செங்கரும்பு பொங்கலிட்டு
செந்தமிழில் குலவலிடும்
எம்குலத்து பெண்டிற்குரல்                                kaviri2
வந்துகேட்கும் நாளுமிது!
புத்தாடை தனையணிந்து
பூக்கோலம் தெருவிலிட்டு
வந்துதித்த கதிரவனுக்கு
வாயார நன்றிசொல்லி..
சுற்றங்களும் சொந்தங்களும்
சூழ்ந்துநின்று கொண்டாடும்…
தைத்திங்கள் முதல்நாளை
தமிழர்தம் திருநாளை
பொங்கலோ பொங்கலென்று
இன்பம் பொங்க கூடிடுவோம்!
இதயம் பொங்க மகிழ்ந்திடுவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பொங்கலோ பொங்கலென்று இன்பம் பொங்க கூடிடுவோம்!

  1. உறவின் மேன்மையும், இயற்கையின் கொடியினை போற்றுதலும் தமிழரின் பண்பாடு.  தங்களுக்கு எமது இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள். 

  2. கவிதை சிறப்பு.  தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *