கனவு காணுங்கள் …
— தேமொழி.
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை பறக்கவியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை பனியுறைந்த
பாலை நிலமாகிவிடும்
கனவுகள் என்ற லாங்க்ஸ்டன் ஹியூஸ் (Dreams – by Langston Hughes) கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி
கனவுகளே குறிக்கோ ளாகும்.
கனவின்றேல்
மனிதம் மரக்கட்டை யாகும்.
அழகிய தமிழாக்கம் தேமொழி.
சி. ஜெயபாரதன்
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செயலாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”
டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )
அக்கினி இடித் தாக்கம் !
அசுர வல்லமை ஊக்கம் !
அப்படிப்
பொறுமை யற்ற புயலிலே
புதுத்திறம் படைக்க
புறப்படும் எமது கனவுகள் !
டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி
உங்கள் பாராட்டிற்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா. உங்கள் கருத்துரைகள் உற்சாகமளிப்பாவையாக உள்ளன.