அஜய் தேவ்கனின் “சிங்கம்” – ஹிந்தியில்
தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “சிங்கம்” திரைப்படம், இப்பொழுது ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டு அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளிவர உள்ளது. ஜூலை 22, 2011 அன்று இத்திரைப்படம் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் வெளியாகவுள்ளது.
ஹிந்தி “சிங்கம்” திரைப்படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். யூனுஸ் சேஜ்வால் திரைக்கதை எழுதியுள்ளார். சாஜித் – ஃபராத் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். தேசிய விருது பெற்ற மராட்டிய இசையமைப்பாளர்கள் அஜய் மற்றும் அதுல் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.