நாய்க்கு நன்றி

சூர்யா நீலகண்டன்

சாலையின் இருமருங்கும்

காட்டு சிங்கங்களும்

வேட்டை நரிகளும்

சீறிப் பாய்ந்ததைக்

கண்டு பயந்து போன

மனிதர்களைப் பார்த்து

பயந்து போனேன்

நானும்.

அவைகளிலிருந்து

தப்பிக்க நினைக்கும்

தருணங்களில்

தந்திரமாய் தப்பித்து

கடக்கும் தருணத்தை

தயவுடன் காட்டிய

என் நாய்க்கு

நன்றியுள்ளவனாய்

நானும்   

 
படத்திற்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க