-ஆர். எஸ். கலா
இரு கண் நோக்கியதும் ஒரு ஈர்ப்பு
இரு இதயம் இடம் மாறியதும் ஒருவித வியர்ப்பு
இரு மனமும் இணைந்ததும் ஒருவிதத் தவிப்பு
இரு வீட்டாரும் சம்மதித்ததும் ஒரே குதூகலிப்பு!
இருகரம் இணைந்ததும் இல்லறம்
இரு உடல் இணைந்ததும் இன்பம்
இரு உயிர்களும் ஓர் உயிரானதும்
விருப்பு வெறுப்பு சமபங்கு!
காதல் என்னும் நாடகம் அரங்கேற்றம்
கண்டது கணவன் மனைவியாக மேடையிலே
தனிமையில் நோக்கிய கண்கள் இரண்டும்
கைகோத்தது உறவினர் முன்னிலையிலே!
முக்கனியும் செங்கரும்பும் என்ன இனிமை
இக்குடும்பத்தில் இனியது இனியது காதல் அல்லோ
இவர்கள் இருக்கும் இடத்தில் பொழிந்து
விடும் காதல் மழை அல்லோ!
கனியான காதல் இனிப்பாகும்
கலையாத கனவாய் நிலையாகும்
கணவன் கண்ணுக்கு நிலவாக மனைவியும்
மனைவி நெஞ்சத்தில் சிலையாகக் கணவனும்
காதல் காவியம் படிக்கலாம் இல்லறத்தில்
படிப்படியாக!
நம்பிக்கை என்னும் செடியில்
பூக்கும் காதல் மலர் கொடுக்கும்
இனிய காதல் கனியை இறுதி மூச்சை
நிறுத்தி இறைவன் யாராயினும்
இருவரில் ஒருவரை அழைக்கும் வரை!

Leave a Reply