பேருந்துப் பயணம்!
மீ.லதா, திருக்குவளை
பரபரப்பான காலைப்பொழுது
அடித்துப் பிடித்துக் கிளம்பிச்
சன்னலோர இருக்கை பிடித்து
’அப்பாடா!’ என்று பெருமூச்சி,
பேருந்தில் அமர்ந்து
காலை உண்ட உணவின்
இடிபாடு தொண்டைக்குழிக்குள் சிறு அசைவாய்
பல் இடுக்குகளிலும்!
தனக்கு மட்டும்தான் இந்த வாழ்கை என்று புலம்பல்!
அருகில் இருப்பவரை மறந்து
கொஞ்சமாக உரையாடலின்
சத்தங்கள் மறந்து போன
புத்தகம், எழுதாமல் விட்ட பக்கங்கள்,
விடுமுறை இல்லையே என ஆதங்கத்தின் வெளிபாடு
உறவு முறை விசாரிப்பு
சற்று நேரத்தில் நிரம்பி வழிந்த பேருந்துகளில் சத்தங்களும்
நடத்துனரின் கூக்குரலும் ”டிக்கெட் யார் எடுக்க வில்லை?” என்று
இவள் மனம் வீட்டிலேயே நின்றது
மூடப்பட்டதா சமையல் பாத்திரங்கள்? சரியாகப் பூட்டப்பட்டதா?
வீடு என்று
இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்த மனம்?
இயல்பாய் நடக்கும் செயல்கள் யாவும்
இவரின் பார்வையில் எழுத்துப் புதையல்.
அவசர கதியில் அதிகாலை இழுக்கும்
அலுவல் நோக்கி நடக்கும் பயணம்..
அதற்குள் இருக்கும் அத்தனைப் பொருளும்
எடுத்துக் காட்டும் இவர்தம் படைப்பு…
புதிய வரவு… வல்லமைக்காக…
நல்வாழ்த்துகளுடன்…
காவிரிமைந்தன்