அவ்வளவுதான் விளக்கம்!

நாகினி

 

மனமது புரியவில்லை
உண்மை மனிதமெது விளங்கவில்லை
வெற்று வாய் வார்த்தை
வெறுமை துயரதை துடைப்பதில்லை

தன் நிலை புரியவில்லை
குழம்பும் மனமது தெளியவில்லை
மதியில் தெளிவு இருந்தும்
விளம்பும் பொய்யதை கழற்றவில்லை

தினம் தேடியும் கிடைக்கவில்லை
பால்வெண்மை மனதினோர் உயிர்க்கவில்லை
முகம் பார்த்து பேசிடுவோர்
அகம் காண விழையவில்லை

வானளக்கும் வாயோரத்திலில்லை
அகங்குளிரும் அன்யோன்யம் எனுமுணர்வில்லை
போலி முகமணியா மனிதமெது
விளக்கம் தெளியும் விளக்கமில்லை!!

… நாகினி

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *