-ஆர். எஸ். கலா

மண்ணில் போட்ட விதை
அத்தனையும் முளை
விடுவதில்லை

முளையிட்ட விதை அத்தனையும்                   fruit tree
பிழைப்பதும் இல்லை

முளைத்த விதை அத்தனையும்
விரிச்சமாவதும் இல்லை

விரிச்சமான விதை அத்தனையும்
பூத்துக் குலுங்கி காய்ப்பதுமில்லை

காய்த்த  காய் அத்தனையும்
கனியாவதும் இல்லை

கனிந்த காய் அத்தனையும்
புசிக்க உதவுவதும் இல்லை

சுவைத்த கனியில் இருந்து
கிடைத்த விதை அத்தனையும்
மீன்டும் மண்ணில் புதைவதும்
இல்லை

குளம் குட்டை குப்பையில்
பாதி, மீதி பாதையில் மிதி
பட்டு உடைந்து வீணாகவே
போகின்றது

இச் சிறு விதையிலே
இத்தனை ஏமாற்றங்கள்
என்றால்…

மனிதன் தன் வாழ்க்கையைக்
கடக்கும்  ஒவ்வொரு நொடிப்
பொழுதும்  எத்தனை ஏமாற்றங்களை
அவன்  பார்க்க வேண்டி இருக்கும்

அந்த ஏமாற்றமே அவனின்
ஏற்றமான படி என்று துணிந்தால்
விரைந்து விழும் வெற்றிக் கனி
அவன் கையில்

கல்லிலும் முளையிடும் விதை உண்டு
மண்ணிலும் மடிந்து விடும்
விதை உண்டு

துணிந்து வெற்றி காணும் மனிதனும்
உண்டு சோர்ந்து தோல்வி காணும்
மனிதனும் உண்டு

சிறு விதையில் விரிச்சம்  காணும்
விதை போல் சிறந்த சிந்தனையில்
வெற்றி காண முயற்சிசெய் மானிடனே!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிந்தனையில் சிகரம் தொடு!

 1. எழுதும் வரிகளெல்லாம் எண்ணங்கள் பதிவு செய்ய
  எப்பொழுது கற்றாயோ..  அப்போதே
  முத்தமிழின் மூச்சுக்காற்று உன்னுடனே
  பயணம் செய்ய அறிந்துவிட்டாய்…
  பிறந்த இடம் ஒன்று.. வாழுமிடம் வேறு
  இருந்திட்ட போதும் இணைப்பதெல்லாம் தமிழே..
  வாழ்த்துகள்…
  காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *