இலக்கியம்கவிதைகள்

அண்ணா!

நாகினி

images

நடுத்தர குடும்பத்து நெசவாளர்
நடராஜன் பங்காருஅம்மை பெற்ற மகவாளர்

காஞ்சி தந்த பேச்சாளர்
அண்ணா! திராவிட இயக்க மூச்சாளர்

தமிழ் ஆங்கில எழுத்தாளர்
மேடை நாடகப் புகழாளர்

ராணி மங்கை மணவாளர்
அண்ணா! அரசியல் வாழ்க்கைப் பயணாளர்..

விடுதலை குடியரசு இதழாசிரியப் பொறுப்பாளர்
திராவிட நாடு இதழ் தொடங்கிய மேலாளர்

சுபப்பெலோஷிப் விருதுடன் யேல் பல்கலைக்கழகப் போற்றாளர்
அண்ணா! மதராஸை தமிழ்நாடு ஆக்கிய பேற்றாளர்

இறுதி ஊர்வலத்திலும் கின்னஸ் சாதனையாளர்
அண்ணாசதுக்கத்தில் அஞ்சலிக்காகத் துயிலாளர்..

அரசியல் இலக்கியம் இரு கண்ணாளர்
அண்ணா! அடுக்குமொழி மேடைப்பேச்சின் மூச்சாளர்

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் வித்தாளர்
இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய விந்தையாளர்

அண்ணாநூற்றாண்டு நூலகம் உருவாக்கப் பெயராளர்
அண்ணா! பல்நூற்றாண்டிற்கும் மறையாத புகழாளர்..!!

.. நாகினி

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    யார் நெஞ்சும் அண்ணாவின் பின் செல்லும் தமிழாலே…
    பேரறிஞர் பெருந்தகையின் சீர் சொல்லும் கவி தந்தாய்..
    வாழ்த்துகள்..
    காவிரிமைந்தன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க