-செண்பக ஜெகதீசன்

சீர்மிகு மன்மதப் புத்தாண்டாய்
     சித்திரை வந்தது சிறப்புடனே,
பேர்பெற நன்றாய் உழைத்திருந்தால்
     பெருமை சேர்க்கும் இறையருளும்,
தேர்ந்திடு நல்ல வழியினையே
     தோல்வி என்பதைப் புறந்தள்ள,
சேர்ந்திடும் வெற்றி நிலைபெறவே
     சித்திரை நாளில் வாழ்த்துவமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *