உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

ak

akk

 

வண்ணம் சிதறாமல் வானில் வரும் கதிரோன்
தன்னில் வருகின்ற கதிரொளியே நம் செல்வம்..
எண்ணம் சிறக்கின்ற ஏற்றம் புரிகின்ற – நாம்
எல்லோரும் இணைந்திங்கே வாழ்வதுவே வாழ்க்கை
ஆண்டு கணக்கிலொரு பக்கம் புரள்கிறது
அடுத்தப் பக்கத்தில் நன்மை பல வருகிறது
அன்னைத் தமிழுக்கு என்றும் இளமையென்று
மன்மத வருடம் இங்கே வாழ்த்துப் பாடுகிறது

அகிலம் முழுவதுமே உலகம் செழித்திடவும்
அமைதிப் பூங்காவில் உயிர்கள் வாழ்ந்திடவும்
வறுமைப் பசிப்பினிகள் பாரில் அகன்றிடவும்
சிகரம் வைத்தாற்போல் பாரதம் உயர்ந்திடவும்

வருகை தரும் நமது சித்திரைத் திருமகளை
இருகரம் நீட்டி இனிதே வரவேற்போம்
திறமை முழுவதையும் இன்னும் செலுத்தியே
உயரும் எண்ணத்தை இதயத்தில் விதைப்போம்!

அனைவருக்கும் உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

என்றும் அன்புடன்…

கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
kaviri2015@gmail.com
www.thamizhnadhi.com a

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *