-சரஸ்வதி ராசேந்திரன்
மாலைமறை கதிரவனில் நிறமெடுத்துப்
பல்லவர் சிற்பமென உருவெடுத்துப்
பைங்கிளியின் அலகினில் இதழெடுத்துப்
பேச்சினியிலே அமுதச்சுவை படைத்தாள்
கண்ணை யுறுத்தும் மலை முகடெனவே
மார்பின்வளம் கொழிக்கவே நின்றாள்
ஒடிந்திடும் புது நாணலிலே
வளைந்திடும் இடை படைத்தாள்
வந்தென்மார் பினில்முகம் புதைத்தாள்
எழுந்தவளைத் தழுவச் சென்றேன்
கன்னி அவளைக் காணவில்லை!
கன்னி அவளெங்கே சென்றாள்?
கனவினிலே நான்கண்ட கன்னியவளைக்
கருத்தினிலே கொண்டு எழுத்தில் வடித்திட்டேன்!

Leave a Reply