வானம் உன் கைகளுக்குள்!

-பாவலர் கருமலைத்தமிழாழன்

பூந்தென்றல்   வீதியுலா
புறப்பட்டு   வருவதற்கே
ஏந்திவரும்   பல்லக்கை
எதிர்பார்த்தா   காத்துளது ?

காரிருளை   மாய்ப்பதற்குக்                              skytouching
கதிரவன்தான்   காலைவர
தேரினையா   எதிர்பார்த்துத்
தெருமுனையில்   காத்துளது ?

கண்களினைப்   பறிக்கின்ற
கார்மேக   மின்னல்தான்
மின்சாரம்   எதிர்பார்த்தா
மின்னுதற்குக்   காத்துளது ?

தானிறங்கி   வருவதற்குத்
தரையிருந்து   குழாய்இணைப்பு
வானிற்கு   வருமென்றா
வளமழையும்   காத்துளது ?

சாதனைகள்   புரிவதற்குச்
சந்தர்ப்பம்     வாய்க்குமென்று
சோதனைகள்   செய்யாமல்
சோம்பலுடன்   இருப்பதுவோ ?

வாய்ப்புகளோ   உனைத்தேடி
வரவேற்பு     கொடுக்காது
வாய்ப்புகளை   உருவாக்கு
வானம்உன்    கைகளுக்குள் !

 

Share

Comments

3 responses to “வானம் உன் கைகளுக்குள்!”

  1. ரொம்ப அற்புதமான கவித்வம் மிக்க பாடல். வாழ்க கருமலை..!
    கவியோகியார்

  2. என் கவிதையைப் படித்துப் பாராட்டிய கவியோகியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  3. வாய்ப்புகளோ   உனைத்தேடி
    வரவேற்பு     கொடுக்காது
    வாய்ப்புகளை   உருவாக்கு
    வானம்உன்    கைகளுக்குள் !

    மிக அருமை அண்ணா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *