இலக்கியம்கவிதைகள்

சிந்தனைச் சிறகடித்தால்…

-ராதா மரியரத்தினம்

சிந்தனைச் சிறகடித்தால்
சீறிடும் எண்ணங்கள்
தென்றலும் புயலாகும்
தண்ணொளி சுடும் நெருப்பாகும்              mariyaratnam
வண்ணங்கள் இழந்த​ வாழ்க்கை
வானவில்லாய் உருமாறும்!

கற்பனைத் தேரேறி
சொற்களும் ஆட்சி செய்தால்
அத்தனையும் உயிர்ப்பாகும்
பேனா முனையினிலே
வண்ணத்துப் பூச்சிகளாய்
வண்டினங்கள் மாறாதோ?
எண்ணக் குவியல் எல்லாம்
சிறகடித்துப் பறவையாய் மாறாதோ?

பூசணிப் பழம்கூடப்​
பல்லக்காய் மாறாதோ?
தும்பிகள்கூட​ பேரிகையாய்த் தெரிய
தூரத்து நீல வானிடைக்
கண் சிமிட்டும் விடிவெள்ளிகள்
நீலச் சேலையில் பதித்த​ வைரங்கள் ஆகாதோ?
கற்பனைக்கும் எல்லை உண்டோ?
சொற்பதங்கள் நடனமாடுமன்றோ?
சிந்தனைச்  சிறகடித்தால்
சீறிடும் எண்ணங்கள்!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    ஆசிரியருக்கு என் வணக்கங்கள்,  நல்ல​ படைப்புக்களைத் தர​ வேண்டும் என்ற​ அவாவைத் தூண்டிய​ ஊக்குவிப்பு…நன்றி நவில்கிறேன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க