தாகூரின் கீதங்கள் – 8 ஆத்மாவைத் தேடி
தாகூரின் கீதங்கள் – 8
ஆத்மாவைத் தேடி
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
அறுவடை மாதங்களில் பரபரப்பாய்ப்
புத்தொளி வீசும் வேளைகளில்
புல்லிலைகள் போர்த்திய
புவித் தளமும் நடுங்குகிறது !
அப்போது தேடுகிறேன்
என் ஆத்மாவை !
பூரிப்பில் மூழ்கும் என் இதயம் !
தெரியும் எனக்கு
வாய் மொழியாக அந்த
வரிகளை !
மௌன பூமியின் மனத்திலே
எப்போதும்
உயிருடன் உலவி வருவது
ஓருணர்ச்சி !
ஈருடல் இணைந்த
நம் ஆத்மக் கூட்டுறவிலே
நீயும் நானும்
முடிவில்லா யுகங்களில்
நீடித்திருக்க வேண்டும் !
இலையுதிர் காலத்துப் பொன்னொளியில்
நிலை தடுமாறினோம்
பல்லினத்துப்
புல்லிலைகள் மீதிலே !
*********************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mumbai : 400023
**********************

