நான் அறிந்த சிலம்பு – 171

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

மேலான தன் கணவன் கூறியதைப் பின்பற்றி,
அக்குரங்கு இறந்த பின்னும் கூட
அதன் தீய பிறவி ஒழிய வேண்டும் எனக்கருதி  Donating gold
தானம் செய்கையில் அதற்கான ஒரு பங்கை
ஒதுக்கி வந்தாள் அப்பெண்.

மத்தியதேசத்தில் வாரணாசி என்ற ஊரில்
உத்தர கௌத்தர் என்பவர்க்கு மகனாய்
மீண்டும் பிறந்தது அக்குரங்கு.

அப்புதல்வன்
அழகு, அறிவு, செல்வம் இவற்றில்
சிறந்து விளங்கினான்.
வள்ளல்தன்மையுடன் தானங்கள்
பலவும் செய்து வாழ்ந்தவன்
தன் முப்பத்தியிரண்டாம் வயதில் இறந்து
தேவர் வடிவம்தனை அடைந்தான்.

பெரிய செல்வத்தைப் பெற்ற பயன் யாவும்
தன்னைப் பாதுகாத்துத் தானம் செய்து வளர்த்த
சாயலன் மனைவியினால்தான் என்பதைக்
கருத்தில் கொண்டு,
அந்த நன்றிக்கடனை
உலகத்தோருக்கு அறிவுறுத்த
ஒரு கையைக் குரங்கின் கையாகக் கொண்டு
இவ்வானவன் பிறந்தான்’ என்று
சாரணர் கூறினார்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 175- 191
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

படத்துக்கு நன்றி: கூகுள்

 

Leave a Reply

Your email address will not be published.