ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …

0

கவிஞர் காவிரிமைந்தன்.

 

aatamaa3கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது.

வெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூடலை கொண்டாட்டம் போட காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா. களிநடனம் புரிய மங்கையாக ரம்யா கிருஷ்ணன். இசையும் பாடலும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட, திரையிலும் வரவேற்பு மிக அதிகமாகவே இருந்தது.

ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெள்ளித்திரை கண்ட வெற்றி சித்திரம். பிரம்மண்டாமான பொருட்செலவில் அடர்ந்த காடுகளின் இடையே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். காதால் கேட்ட கதைதான், செய்தித் தாள்களில் வாசித்தகதைதான் என்றாலும் தக்க பாத்திரங்களை பொருத்தி அக்கதையை முழுமையாக நம் கண்களுக்கு விருந்தாக்கி படைக்கப்பட்ட இப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதும், இப்படத்திற்குப் பிறகு அவர் கேப்டன் என்றே அழைக்கப்படுவதும் கூடுதல் தகவல்களாகும்.

மறைந்த பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் இனிமையும், புதுமையும், நிறைய துள்ளலும், ஆட்டமும் முழுவதும் நிரம்ப அசத்தலான நடனம்புரிந்த ரம்யா கிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் நடனமாடும் மங்கையின் குறி வில்லனை நோக்கித்தான், அந்த வகையில் இந்தப்பாடல் நம்மைக் கவர்ந்த ஒன்று என்பது நிச்சயம்.

 

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான்
எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது – என் ராசாவே…
பூ வாசம் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது – நீ என்னை தேட
மாராப்பு மெல்ல தொட்டது
பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா – அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா – அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

படம்: கேப்டன் பிரபாகரன்
வரிகள்: பிறைசூடன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

காணொளி: https://www.youtube.com/watch?v=vsTbNwqEDb0

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *