பவள சங்கரி

இன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள். அவர் ஏன் பெருந்தலைவர்?

kamaraj-lalbahardur

தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய் சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரைக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார். அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால், சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவர் ஏன் பெருந்தலைவர்?

  1. ஒரு மகத்தான தலைவரைப் பற்றிய செய்திக் குறிப்பு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  2. அழுகையாக வருகிறது.இந்தக் கவிஞனுக்கு. அருமையான என் பழம் தலைவர் காமராஜருக்குப்பிறகு ஏன் என் என் நாட்டில், பாரதத்தில் அப்பழுக்கற்ற தலைவரே இல்லை. வாழ்க பெருந்தலைவர்!

    கவியோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *