-பா வானதி வேதா. இலங்காதிலகம்

அலட்சியங்களால் அலவு கொண்டாலும்
அலட்டிக் கொள்ளாது அம்பாக
அலத்தமாகச் செந்தமிழ் தெம்பாக            vetha
அலங்கார வரிகள் ஓயவில்லை!

கவி, பா மழை
புவியான மனம் நனைக்க
அவிழ்வது அமைதி ஆனந்தம்
குவிவது தமிழ் வாசம்!

நினைத்ததை மேடையில் கூறல்
நிகழ்ந்தது பதினொரு அகவையில்
நின்மல எழுச்சியது பெரும்
நிறைவுடை ஆக்கம் ஊக்கம்!

கர்வம் சுயநலம் நிறையுலகில்
சர்வசாதாரணச் சஞ்சாரம் கடிது
வர்ணம் பூசி வகையாய்
அர்ப்பணம் செய்யலாம் காலத்தை!

(அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *