ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்ரீ சன்னிதானம்
-மீ.விசுவநாதன்
கொஞ்சும் அழகிய சோலை – குயில்
கூவுதோர் ஞானியின் பேரை!
நெஞ்சங் குவித்தே நின்றேன் – “விது
சேகர பாரதீ” கண்டேன்! (கொஞ்சும் அழகிய சோலை) 
உன்னை ஆட்கொண்ட ஆசான் – ஓர்
உத்தம குருவம்ச யோகி!
தென்னை மரக்கிளை மீதில் – இளந்
தென்றல் சொன்னதிச் சேதி! (கொஞ்சும் அழகிய சோலை)
இச்சை என்பதே இல்லா – இந்த
எளிய குருவைப் பாரீர்!
பச்சைக் கிளிகளின் கூட்டம் – வானில்
பாடிச் சென்றதைக் கேளீர்! (கொஞ்சும் அழகிய சோலை)
அரிய தத்துவ வாக்கை – குரு
அறிந்து கற்றவர் என்றே
விரிந்த ஞானம் பெற்றோர் – தாள்
வியந்து வணங்கினர் இன்றே! (கொஞ்சும் அழகிய சோலை)
பாமர மக்கள் நெஞ்சில் – இவர்
பட்டொளி விரிவதைக் காண்போம்!
சாமரம் வீசுது கல்வி – இவர்
சாரதை என்றே பணிவோம்! (கொஞ்சும் அழகிய சோலை)
(இன்று 19.08.2015 புதன் கிழமை சிருங்கேரி
ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ விதுசேகர பாரதீ
ஸ்ரீ சந்நிதானம் அவர்களின் 23வது (வர்த்தந்தி) பிறந்த தினம்)

அருமையான கவிதை… பாராட்டுக்கள்
க. பாலசுப்ரமணியன்
வணக்கம்
மிக அருமையாக உள்ளது ரசித்த பகுதி பாமர மக்கள் நெஞ்சில் – இவர்
பட்டொளி விரிவதைக் காண்போம்!
சாமரம் வீசுது கல்வி – இவர்
சாரதை என்றே பணிவோம்!
சரணம் என்றிவர் பாடி – அதைச்
சொன்னதில் எத்தனைப் பாங்கு!
சிரமது பணிந்தே வணங்கி – பதம்
பற்றினே னெனைநீ காப்பாய்!