சென்னையில் இலவச ஹெப்படைட்டிஸ் ‘பி’ தடுப்பூசி முகாம் – செய்திகள்

0

சென்னை : ஜூலை 31, 2011.  மியாட் மருத்துவமனை சார்பில் இன்று இலவச ஹெப்படைட்டிஸ் ‘பி’ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இதில் பதின்மூன்று பள்ளிகளில் இருக்கும் 22,070 மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கப்பட்டது.  ஆரோக்கியம் குறித்த கண்காட்சி மற்றும் இலவச ஹெப்படைட்டிஸ் ‘பி’ கண்காணிப்புத் திட்டம் ஆகியவைகளையும் ஒருங்கிணைத்திருந்தனர் மியாட் மருத்துவமனையினர்.  நடிகர் திரு. விக்ரம் இந்நிகழ்ச்சியின் இளைஞர் விளம்பர தூதராக இருந்து நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஹெஸ்பிவி தொற்று மற்றும் நோய்த்தடுப்பின் மதிப்பு ஆகியவைகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சவாலை மியட் மருத்துவமனை சந்திக்க முடிவு செய்தது.  இந்தியாவிலுள்ள பள்ளிகளில் மியாட் மருத்துவமனை சோதனைகள் மேற்கொண்ட போது கிடைத்த முடிவுகள் அதிர்ச்சிகரமாக இருந்தது. ஒரு சதவிகித பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கவில்லை.  இதன் காரணமாக மியாட் மருத்துவமனை “லிவர் 4 லைஃப்” பிரச்சாரத்தைத் தொடங்கியது.  24 ஜூலை 2011 அன்று பள்ளி மருத்துவ முகாம்கள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான வினா விடை ஆகியவைகளை நடத்தினார்கள்.  பதினான்கு பள்ளிகளை சேர்ந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளிடையே போட்டிகளை நடத்தி, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த மாணவர்களை மியாட் அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் பங்கேற்றனர்.

பள்ளிகளீல் இருக்கும் மஞ்சள் பட்டை (யெல்லோ ரிப்பன் YELLOW RIBBON) குழுக்கள் மூலம் விழிப்புணர்வினை உருவாக்குதல் மற்றும் இச்செய்தியினை நாட்டின் மூலை முடுக்குகளிலும் பரப்பும் பணிகளில் ஈடுபடுவர்.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.