ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 10

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 ஓ இரவே !

 

ஓ இரவே

__________________________

இரவுக் காதலரே ! நீவீர்
இளங் கவிஞர், பாடகரின்
இதய உணர்வை உசிப்பி விடுவீர் !
ஆன்மாக்கள், மர்மத்தின்
போலித் தோற்றத்தின் இரவே !
புனித நம்பிக்கை, நினைவுகளின்
மோக இரவே ! நீ ஓர்
பூத வடிவில் தோன்றி
மாயமாய்க் குள்ள மாக்குவாய்
மாலை முகில்களை !
காலையில்
ஆலயக் கோபுர மாக்குவாய்
அச்ச மென்னும் ஆயுதம் ஏந்தி
ஒளிநிலவைத்
தலைக் கிரீடமாய் அணிந்து
மௌனத்தை
முகத் திரை யாக்கி !
__________________________

ஆயிரம் விழிகளோடு
ஆழமாய் ஊடுருவி வாழ்வினை
ஆய்வு செய்கிறாய் !
ஆயிரம் செவிகளோடு
வாழ்வு அறுந்து
மரணத்தின் முணுமுணுப்பு
அரவத்தைக் கேட்கிறாய் !
சொர்க் கத்தின் விளக்கு
சுடரொளி பாய்ச்சு கிறது
உனது இருட்டறைக்கு !
பகற் பொழுதில் ஒளி வெள்ளம்
மூழ்க்கி விடும் நம்மை
பூமியின்
புரிவற்ற நிலையால் !
நித்திய வாழ்வின் நினைவச்சம்
விழிகளைத் திறந்து
நம்பிக்கை அளிக்கும் முன்பு
நாள் என்பது
நம்மைக் குருடாக்கி ஏமாற்றும்
அளக்கும் கோலோடும்
பருமப்
பரிமாணத் தோடும் !

__________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *