விசாலம்

திரு ராமதாசர் உயர்நிலைப் பள்ளிமாணவனாக  இருந்தார் அப்போதே கிருஷ்ண  ஜயந்தி வரும் நேரம் பல திரு விழாக்களில் பங்கு பெற்று அரும் சேவை செய்வார்  . அவரது பன்னிரண்டாவது வயதில் கீழாமூர் கிராமத்தில் சப்த கன்னிக் கோயிலில் அமர்ந்திருந்த  போது அவருக்கு அம்மனின் அருள் வந்ததாகச் சிலர் சொல்கின்றனர்

ஒருசமயம்”ஐதராபாத் சுவாமிகள்” சென்னை வந்து  ஸ்ரீராமநாயுடு என்பவரின் வீட்டில் தங்கி சதசங்கம்  வழங்கினார்.அப்போது .

மாணவனாக இருந்த திரு.ராமதாஸ் சுவாமி அவருடன் தங்கி அவருக்குச் சேவை செய்து உற்றத் தொண்டனாகி அவர்தம் அன்புக்குப் பாத்திரமானார். அவர் மூலம் பல அறிய சத்சங்க விவரங்களும் வேதத்தின் சாரத்தையும் ஹிந்துமத சம்ஸ்காரத்தையும்  அறிந்து கொண்டார் .
ஒருநாள் அவர் பூஜையின் போது இந்த மாணவன் அமர்ந்திருக்க ”  மகனே ராமதாஸ் உன்னைத்தேடி ஒருவள் வருவாள். அவளால் உனக்குப் பலன் உண்டு
உன்னிடமே அவள் இருப்பாள்”  என்றார்.

பின்னால் பல காலம் கழித்து  அவர்  சொன்ன   அந்த வாக்கியங்கள்  பலித்தது   கற்பூரநாயகி கருமாரி அவரை ஆட் கொண்டாள் அவர் மூலம் பல பக்தர்களின் குறையையும் தீர்த்து வைத்தாள்.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன்  சுவாமிஜி சில காலம்  பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து பொழுதைக் கழித்தார்

சென்னை மாநகராட்சியில் அவருக்கு வேலை கிடைத்த பின்பு இலக்குமி என்பவரைத் திருமணம்
செய்து கொண்டார்.

ஆனால் அவருக்கு வந்த  சம்பளம் எல்லாம் பொதுப் பணிக்கே  அர்ப்பணம் செய்ததில் குடும்ப வாழ்க்கையில்  பல பிரச்சனைகள்  தோன்றின. ஆனாலும் மனம் தளரவில்லை அன்புக்காகவே அன்பைத் தந்து யாவரும் பாராட்டும் அன்பராகி அருள் வழங்கி அன்பே தெய்வம் அவளே  ஓம் சக்தி என புரிய வைத்தார் ,

தனக்கு மழலைச் செல்வம் கிடைக்க வில்லையே என மனதில் ஒரு ஏக்கம் இருக்க திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு  குறி சொல்லும் நடேசனார் அவர்களைச் சந்தித்தார் .

அவ்வளவுதான் சுவாமி நடேசனாரின் சிஷ்யராகி அவரது தொண்டராகி   கருமாரியின் பொற் பாதங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார் ,

கருமாரியின் ஆலயத்தைப் பெரிதாககி திருக் கோபுரம் திருப்பணி ஆரம்பித்து அதைச் சிறந்த வகையில் முடிக்க வேண்டும் என்று  ஒரு வெறியில்  ஊண் உறக்கமின்றி  பதினைந்து பேர்கள் கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி அதற்கென்று  உழைத்தார்  .அவரது  தன்னலமற்ற சேவையினால் இன்று ஆலயம் தங்கத் தேருடன் கருமாரி ஊர்வலம் வருமளவிற்கு  உயர்ந்திருக்கிறது .

நாங்கள் பல வருடங்கள் முன்பு அங்கு செல்லும் போது
சரியான சாலை வசதி இல்லை ஒரே மண் தெருவாக இருந்தது .மாதம் ஒரு முறை சென்றாலே போதுமென ஆகி  விடும ஆனால் திரு ராம தாசரோ தன் சைக்கிளில்  சுமார் 15 கிமீ ஓட்டிய படி  தினமும்  ஆலய பணியைப் பார்க்க  வருவார் கர்மமே கண்ணாயினார் என்பது இவருக்கு மிகப் பொருந்தும் எந்த காரியம் எடுத்தாலும் அதைத் திறம்பட முடித்துக் கொடுக்க வேண்டும் என்று உழைப்பவர்  சுவாமிஜி .

திருவேற்காடு ஆலயத்தில் ஜூன்  மாதம் 19ம் தேதி 1964ல் திருக்குட முழுக்கு  மிகச் சிறப்பாக நடை பெற்றது அன்றைய தினத்திலிருந்து செவ்வாய்  . வெள்ளி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் கூட்டம் சொல்லி முடியாது

திருவேற்காட்டிற்கு ஒளி ஏற்றிய இவர் என் நினைவில்
அகலாது வீற்றிருக்கிறார் எப்போது மனக்கஷ்டம் என்றாலும் உடல் நலம் கெட்டாலும்  இவரைப்
பார்க்கத்தான் போவோம் .கருமாரி வந்து பேசி எனக்கு
பல தடவைகள்  ஏழு வரளி மஞ்சளைச் சாம்பலுடன் கொடுத்து விட்டு மஞ்சளை அரைத்து சாப்பிடவும்
சாம்பலை நெற்றியில் இட்ட பின் மீதியை ஊதி விடும்படி கட்டளையிடுவார்.

தன் குரு நாதருக்கும் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளார் தவிர ஏழை எளிய  சிறுவர்கள் கல்வி  கற்க “ஜீவரத்ன அம்மாள் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தை சுமார் 70 குழந்தைகளுடன் ஆரம்பித்து இன்று 2000 பேர்கள் படிக்கும் ஆலமரமாக வளர்ந்து  நிற்கிறது .

இவரது சமாதி  திருவேற்காடு கோயில் அருகிலேயே உள்ளது  . அடுத்த பாகத்தில் அதை எழுதுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.