கலை இலக்கிய விமர்சன பிதாமகர் வெ.சா. அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

1

12096615_544287879057749_1496629938531303543_n

அரை நூற்றாண்டு காலமாக  தனது கூர்மையான எழுத்துக்களாலும், நேர்மையான விமர்சனங்களாலும் அனைத்து வாசகர்கள் மற்றும் படைப்பாளர்களின் மனத்தில் நீங்காத இடம் பெற்றவரும், நம் வல்லமை இதழில் ஆரம்ப காலங்களிலிருந்து பல படைப்புகளை வழங்கியுள்ளமையோடு, போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்து எங்களை வழி நடத்திய புனித ஆத்மாவான உயர்திரு வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடையவும்,  ஐயாவை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறையை மனமாரப் பிரார்த்திக்கிறோம். கலைமகளின் பூரண அருள் பெற்ற வித்தகர் இப்புனித நந்நாளில் அன்னையின் மலர்ப்பாதம் அடைந்துள்ளார். என்றும் நம் மனங்களில் நீங்காமல் நிறைந்திருப்பார். அன்னாரின் மறைவு கலை, இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கலை இலக்கிய விமர்சன பிதாமகர் வெ.சா. அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

  1. வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு என்றும் தமிழ் நெஞ்சங்களில் இருக்கும். அவரது ஆத்மா சாந்தி பெரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *