– தேமொழி

தனிமையிலே …

கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
மொழிபெயர்ப்பு – தேமொழி

 

நினைவு தெரிந்த நாள்முதலாக
நான் வாழவில்லை பிறரைப் போல
எனக்கு வாழ்க்கையுமில்லை பலரைப் போல
என் ஆசைகளின் நீரோட்டம்
தோன்றிய நீரோடையும் வேறுபட்டது
என்னை வருத்தும் துயரங்களின்
தோற்றமும் முற்றிலும் வேறுபட்டது
எனது இதயத்தை மீட்டிடும் இன்ப
இசையின் ராகமும் வேறுபட்டது
அனைத்தையுமே நான் நேசித்தேன்
நேசித்தேன் நான் தன்னந்தனியாகவே!
என் சிறுவயதிலிருந்தே, புயல்வீசும்
என் வாழ்வின் அந்த விடியல் முதலே
என் வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும்
என்னைக் குழப்புமிந்தப் புரியாத புதிர்
காட்டாற்று வெள்ளமானாலும்
கவின் மிகு நீரூற்றானாலும்
செந்நிற மலைமுகட்டிலும்
பொன்னிற ஒளிவீசும்
கூதிர்காலக் கதிரவனிலும்
என்னைக் கடந்து செல்லும் புயலிலும்
அதன் மின்னலிலும் இடியோசையிலும்
தெளிந்த நீலவானில் திரண்டிடும்
உருமாறிடும் மழைமேகத்திலும்
நான் காண்பதென்னவோ
அச்சமூட்டும் பேயுரு மட்டுமே!

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

Edgar Allan Poe

Alone

– Edgar Allan Poe

 

From childhood’s hour I have not been
As others were; I have not seen
As others saw; I could not bring
My passions from a common spring.
From the same source I have not taken
My sorrow; I could not awaken
My heart to joy at the same tone;
And all I loved, I loved alone.
Then- in my childhood, in the dawn
Of a most stormy life- was drawn
From every depth of good and ill
The mystery which binds me still:
From the torrent, or the fountain,
From the red cliff of the mountain,
From the sun that round me rolled
In its autumn tint of gold,
From the lightning in the sky
As it passed me flying by,
From the thunder and the storm,
And the cloud that took the form
(When the rest of Heaven was blue)
Of a demon in my view.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தனிமையிலே …

  1. தமிழ் மொழிபெயர்ப்பு சிற்றோடை போல் தெளிவாய், எளிதாய் ஓடும்படி ஆக்கப் பட்டுள்ளது. பாராட்டுகள் தேமொழி.

    சி. ஜெயபாரதன்

  2. உலகப் புகழ்பெற்ற பல கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிவரும் உங்களிடம் இருந்தே பாராட்டு பெறுவதை விட மகிழ்ச்சிக்குரியது வேறொன்றில்லை ஜெயபாரதன் ஐயா.  உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *