பவள சங்கரி

கி.மு. 569ல் கிரேக்கத்தின் சமோஸ் தீவில் பிறந்தவர் பித்தகோரசு  (Pythagoras of Samos). நரம்பிசைக் கருவியான மகர யாழ் இசைப்பதில் வல்லவரான இவர் இசைஞர் மட்டுமல்ல கவிஞரும்கூட. கணிதம், தத்துவஇயல், வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கி.மு. 535 ம் ஆண்டு வாக்கில் சாமோஸ் தீவிலிருந்து எகிப்து சென்ற பித்தகோரசு, அங்கு ஆயகலைகளைக் கற்றார்.

apg

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பித்தகோரசின் நம்பிக்கைகள் மற்றும் உயரிய தத்துவங்கள் இன்றளவிலும் நம் வாழ்க்கைக்கு இயல்புடையதாகவே இருப்பது ஆச்சரியம்தான் இல்லையா…

உலகில் அனைத்துமே எண்கள்தான். கணிதமே அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படை. வடிவியல் கணிதப் படிப்பின் உயர் வடிவம். கணிதம் மூலமாக இந்த பூவுலகை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

மூளையில் உறைவதுதான் ஆன்மா. அழிவில்லாத அது ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு என மாறி பிறப்பறுத்து தூய்மை
அடைகிறது. கணிதமும், இசையும் மட்டுமே ஆன்மாவை தூய்மைப்படுத்த வல்லவை.

இந்த எண்களுக்கும் ஆளுமை, பண்புகள், வலிமை, பலவீனங்கள் போன்ற அனைத்தும் உண்டு என்கிறார்.

இந்த பிரபஞ்சம், ஆண்-பெண், , வெப்பம்-குளிர்ச்சி, ஈரப்பதம்-வறட்சி, ஒளி-இருள், மென்மையானது-கனமானது, வேகமானது-மெதுவானது
என எதிர்மறைகளின் இடைச்செயல்பாட்டை (interaction of opposites) பொறுத்தது.

சிந்திக்கத்தக்கவை அல்லவா.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “எல்லாமே கணக்குதாங்க….. !

  1. நல்ல பதிவு. கணக்கின் மீது ஆர்வம் கொள்ள வைத்தது பித்தகோரஸ் விதி. இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, எனக்கு பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பில் பித்தகோரஸ் விதியைப் பாடம் எடுத்த ஆசிரியர் A.V.K. சாரை நினைவு படுத்தியது.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  2. முற்றிலும் உண்மை .. இடது மூளை கணக்கு (logical thinking ) மற்றும் வலது மூளை இசைக்கும் (Aesthetic thinking and music ) பயன்படுவதாக மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. இரண்டின் வேலைகளையும் இணைத்து மூளையை முழுவதுமாகப் பயன் படுத்தும் பொழுதில் (whole brain approach) வாழ்க்கையின் வெற்றிப் படிகள் எளிதில் தெரிகின்றன.  

  3. எல்லா கலைகளுக்கும் கணிதம் உதவுகிறது, அக்கலைகளில் கோலோச்சுகிறது என்று “கணித சார சங்கிரகம்” என்ற நூலில் மகாவீரர் என்ற கணித ஆசிரியர் கூறியுள்ளார். இதுவே சமஸ்கிருததின் முதல் கணித நூல், இதற்கு முன் சுல்பசாத்திர நூல்களிலோ ஜோதிட நூல்களிலோ ஒரு பகுதியாகவே கணிதம் இருந்தது. 

    மகாவீரரின் கவிதையும் என் தமிழாக்கமும் இங்கே http://varahamihiragopu.blogspot.com/2013/09/blog-post.html

  4. கணிதம் இல்லையேல் கண்டுபிடப்புகள் இல்லை. பித்தகோரசின் தகவல் தந்தற்கு எனது இதயங்கனிந்த நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *