பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

0

சத்தியமணி

KKL18PML-horz

கணபதி நின்பொற் தாளடி சரணம்

ரிதிசித்தி நிம்மதி தா

 

ஆழ்வார் அடிபற்றி அருட்பக்தி பெற்றாரும்

தாழ்வாரோ இவ்வையகத்தே

 

சக்தியை தந்துநல் சாந்தமும் தந்து

பக்தியை தந்துதிரு மகளுடன்சேர்

யுக்தியை தருமுன் அருள்கொண்டபின்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

நிறைவுடை  மனதும் குறைவிலா தனமும்

மறைதரு நாவும் நவின்றிடும் குணமும்

இறையென தினமுன் தரிசனம் தந்தபின்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

ஜாதகம் ராசிகள் கோள்களும் காலமும்

சாதகம் ஆக்கிடும் சங்கதி அறிந்தவன்

காதகம் மந்திரம்  நாமமாய் ஓதியும்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

அலையிலா ஆழியில் அரண்மடி யோகமும்

மலையதன்  ஏழினில்  நின்றருங் கோலமும்

நிலையிது எனதினம்  எழிலதை காட்டினாய்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

அருவியாய் அனுதினம் அருள்தர விழைந்து

கருவியாய்   இயங்கி  நேரலைத் தருவித்து

மருவியான்  மகிழவே திருவிழா  காணவைத்தும்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

மாதவா கோவிந்தா  கோபாலா திரு

மாலவா அச்சுதா அனந்தா கிருஷ்ணா

கேசவா நாராயணா எனக்கொஞ்சியபின்னும்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

திருமகள் உடன்மகிழ் திருநிவாசா என்றன்

இருதய    மலர்வளர்    அலர்மங்கை நாதா

ஒருமுக  மாயெனது உள்ளே கொலுவிருக்க‌

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

 

செப்பியதும் நீயாவாய் செபிப்பதும்  நீயாவாய்

தப்பியதும்    நீயாவாய்  தவிப்பதும்  நீயாவாய்

அப்பியதும்  களபமாய்  ஆக்கியதும் நீயாயின்

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

 

அழகானக் கண்களில் அலங்காரம் நீயானாய்

பழகாத  நாவினிலோ பைந்தமிழ் நீயானாய்

நிழலாக வந்தெனக்கு உயிரானாய் உறவானாய்

குழலாக என்னை இசை

(இதை  எழுதிய மூன்றாம் நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது ! வேங்கடன் தில்லிக்கு வந்து தரிசனம் தரும் செய்தி  ..எட்டு நாட்கள் வைபவம் அவனுக்கும் எனக்கும் தான்..ஸ்ரீ வேங்கடேசாய நம:)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *