படக்கவிதைப் போட்டி (41)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
கண்ணன் முத்துராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
வருகிறீர்கள்
அமர்கிறீர்கள்
பறக்கறீர்கள்
வேடனை ரசிகனாக்கிய
நீங்கள் எந்த
நாட்டு பறவைகள்,
சிறுவர்களே……!
கவிஜி
கடலின் முனைகளை கப்பலின் மூலம் கடக்கலாம்
மனிதனின் மூளைகளின் மூலம் மனதை அறியலாம்
ஆற்று நீர் குடிநீராக மாறுகிறது
கடல் நீர் உப்பாக மாறுகிறது
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
உணர்வில்லாத மனம் சுடுகாட்டிலே
கடலிலே மிதக்கலாம்
எல்லாவற்றையும் மறக்கலாம்
சின்னஞ்சிறு சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
பறப்பது போல மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்
கடலில் தோன்றுவது முத்து
மனதில் தோன்றவது வைராக்கியம் என்ற வைரமுத்து
கடலின் ஆழம் பெரியது தான்
மனித மனத்தின் ஆழ்மனது அதைவிடப் பெரியது
கடலின் சீற்றம் சுனாமி
மனித மனத்தின் ஊக்கம் மியாமி பல்கலைகழகத்தலும்
கற்க வைக்கும்
போட்டி…
தணியாத உற்சாகத்தில்
பிள்ளைகள்
தண்ணீரில் விளையாடுவதைப்
பார்த்துத்தான்,
போட்டியாய்
வந்து விளையாடிவிட்டதோ
வான்மழை…!
-செண்பக ஜெகதீசன்…
கடலின் முனைகளை கப்பலின் மூலம் கடக்கலாம்
மனிதனின் மூளைகளின் மூலம் மனதை அறியலாம்
ஆற்று நீர் குடிநீராக மாறுகிறது
கடல் நீர் உப்பாக மாறுகிறது
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
உணர்வில்லாத மனம் சுடுகாட்டிலே
கடலிலே மிதக்கலாம்
எல்லாவற்றையும் மறக்கலாம்
சின்னஞ்சிறு சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
பறப்பது போல மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்
கடலில் தோன்றுவது முத்து
மனதில் தோன்றவது வைராக்கியம் என்ற வைரமுத்து
கடலின் ஆழம் பெரியது தான்
மனித மனத்தின் ஆழ்மனது அதைவிடப் பெரியது
கடலின் சீற்றம் சுனாமி
மனித மனத்தின் ஊக்கம் மியாமி பல்கலைகழகத்திலும்
கற்க வைக்கும்
உள்வாங்குதலும்
ஒரேயடியாய்ச் சீறுவதும்
கடலின் இயல்பே…….
வேடிக்கை பார்ப்பதும்
விளையாட்டாய் ஓடுவதும்
சிறுவர்கள் இயல்பே…….
வாழ்க்கை இப்படித்தான்….
சிலநேரம் சீறும்,
பலநேரம் உள்வாங்கும்…
புறமுதுகிட்டு ஓடவேண்டாம்;
வெருண்டு பயந்தோடவேண்டாம்.
கரைதொடும் முன்னம்
கடக்க வேண்டியவை ஏராளம்!
கவனங் கொள்ளுங்கள்,
கற்க வேண்டியவையும் ஏராளம்!
எங்கேயும் எப்போதும்
எவரிடமோ..எதுவிடமோ…
இங்கிதமாய்ப் பாடங்கள்
இனிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
இது தான், இவை தான்
என்றின்றி,
ஆகாய வெளியெங்கும்
ஆண்டவன் விதைத்துள்ளான்…
ஆகவே சிறுவர்களே…..
இலக்கு உருவாக்கி
இலக்கு நோக்கி ஓடுங்கள்!
பன்முகப் பார்வையை
ஒருமுகமாய்க் குவியுங்கள்.
கடலும் உங்கள்
கைகளில் அள்ளலாம்,
வாழ்க்கையை மகிழ்வுடன்
வாழ்ந்திடுங் கலை வெல்லலாம்.
“இளவல்” ஹரிஹரன், மதுரை.
அடிக்கும் மழைக்கும் அரசே பொறுப்பென்று
அசட்டை கொள்ளாமல் அசமந்தம் காட்டாமல்
துடிப்போடு செயல்படுவோம் தோழனே..
ஓடு ஓடு விரைவாய் ஓடு
அதோ தூரத்தில் நமதுறவுகளை
மழைவெள்ளம் அடித்துச் செல்கிறது
அறிக்கைகள் விடுவது அரசின் வேலையாகட்டும்
ஆபத்தில் உதவுவது நமது கடமையாகட்டும்
ஓடு தோழனே ஓடு ..
கடலின் முனைகளை கப்பலின் மூலம் கடக்கலாம்
மனிதனின் மூளைகளின் மூலம் மனதை அறியலாம்
ஆற்று நீர் குடிநீராக மாறுகிறது
கடல் நீர் சூரியன் மூலம் மேகமாக உருமாறி மழையாக பெய்கிறது
கடல் நீர் உப்பளங்கள் மூலம் உப்பாக மாறுகிறது
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
உணர்வில்லாத மனம் சுடுகாட்டிலே
கடலிலே மிதக்கலாம்
எல்லாவற்றையும் மறக்கலாம்
இன்பமாய் திகழாலாம்
சின்னஞ்சிறு சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
பறப்பது போல மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்
கடலில் தோன்றுவது முத்து
மனதில் தோன்றவது வைராக்கியம் என்ற வைரமுத்து
கடலின் ஆழம் பெரியது தான்
மனித மனத்தின் ஆழ்மனது அதைவிடப் பெரியது
கடலின் சீற்றம் சுனாமி
மனித மனத்தின் ஊக்கம் மியாமி பல்கலைகழகத்திலும்
கற்க வைக்கும்
மாயப்போராட்டம்
உன்னை நோக்கி
நாங்கள் வரும்போது
நீ ஓடுவதும்
எம்மை நோக்கி
நீ வரும்போது
நாங்கள் ஓடுவதும்
இது என்ன
மாயப் போராட்டம்
வானுக்கு சென்ற நீ
வருவாயா என
எத்தனை ஆண்டுகள்
ஏங்கியிருக்கிறோம்
இன்று இப்படி
ஏரளாமாய் வந்து
போகமாட்டாயா என
புலம்ப வைத்தது ஏன்
கெடுப்பதும்
கெட்டாரை வாழவைப்பதும்
நீயே என்றான்
வான்புகழ் வள்ளுவன்
கெடுத்துவிட்டாய்
எப்பொழுது
வாழ வைப்பாய்?
கிளிஞ்சல்கள்
இந்த சிறுவர்களுக்கு
விளையாட்டு மைதானமும்
வாழ்க்கையுமே கடல்தான்
இவர்களின் பெற்றோர்கள்
கடலுக்குள் சென்றால்தான்
இவர்களின் பசியும் பட்டினியும்
போகும் நிலை
இவர்கள் தந்த சிற்பங்கள் அல்ல
இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்
சக மனிதர்களின் துன்பம் கண்டு
வேகமாய் ஓடி தங்களால்
முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
கரை சேர்க்கும் மனித நேயம்
கொண்டவர்கள்
மல்லிகையை விட மணமுள்ள
மானோ ரஞ்சிதங்கள்
செந்தாமரையைகாட்டிலும்
அழகான உணர்ச்சிகளும்
கொண்ட சிறுவர்கள்
இவர்கள் மீனவர்கள் அல்ல
மீட்பவர்கள் தேவதூதர்கள்
சென்னை வெள்ளத்தில்
தன்னை இணைத்துக்கொண்ட
தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்
சரஸ்வதி ராசேந்திரன்
படவரி 41
கொள்ளியிடும் வெள்ளம்
இன்பத் துள்ளலோ இது!
துன்பம் அள்ளல் தமிழ்நாட்டிற்கு!
கடலா பார்ப்பது! அன்றி
திடலையும் எட்டும் வெள்ளமா!
வெள்ள மட்டம் ஏறுதென்று
பள்ளம் நோக்கிப் பாயுதென்று
கொள்ளியிடும் இதயத்தோடு பதறி
துள்ளியோடும் பிள்ளைகளா இவர்கள்!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
5-12-2014