குதிரையை எனக்குப் பிடிக்கும்

0

 மதுமிதா

10518674_307423642786795_5858810718641257109_o

குதிரை வண்டியில் பள்ளிக்குப் போவதற்கு முன்பே
இசைக்கேற்ற ரசனை சார்ந்த நளின அசைவுகளுடனான
உன் நாட்டியத்தை சர்க்கஸில் பார்த்திருந்தேன் சிறுமியாய்

குழந்தையை முதுகில் தாங்கிய ஜான்ஸிராணியின் படத்தைக்
கண்டதிலிருந்து நானே உன் மீது பவனி வருவதாய் உணர்வு

இலக்கியங்களில் உன் மீதமர்ந்து வருபவர்களை வாசிக்கையில்
திரையில் குதிரையில் பாடிக்கொண்டே பவனி வரும்
கதாபாத்திரங்களை காண்கையில் உன் மீதான நேசம் மிகுந்தெழ
உன்னில் எப்போதும் பயணித்தேன்

உன் பக்கப்பார்வை மறைக்கப்பட்டு
கட்டுப்படுத்துபவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கிறாய்
ஆற்றல் நிறை பெண்ணுக்கோ குடும்பம் கடந்து,
சமூகப்பார்வை மறைக்கப்படுகிறது

குதிரைப் பந்தயத்தில் காற்றாய் பறக்கும் உன் வேகத்தைத் துறந்து
சதுரங்கத்தில் குறைவான கட்டங்களிலான உன் நகர்வு
சமயலறைக்கும் படுக்கையறைக்குமான
என் நகர்வினை நினைவுபடுத்த
நானும் நீயும் ஒன்றெனும் பிணைப்பு
இன்னும் என் நினைவுகளில் வலுவினை சேர்க்கச் சேர்க்க

குதிரையே உன்னை இன்னும் இவ்வளவு பிடிக்கும்.

The poet reflects her affinity towards horses, from her early childhood. The similarities between a horse and a woman is compared here poetically.

31.08.2015

The Horse is to my liking
Published by: shanmugam on 4th Oct 2015 
Even before going to school by cart
Drawn by the horse, I know you as a child,
As you did dance to the tune in the circus.

Ever since I saw Queen Jansi with her child
On her back in the picture, I felt riding you.

Reading characters in literature
As riding, and seeing on the screen heroes
Riding about on horses with singing,
I rode you in mind with passion built up.

Your sight of side views blocked by side screens,
You behave obeying to your controller.
To the versatile women being house bound,
Societal outlook beyond home is denied.

Your moves designed to a few squares in Chess,
Far from your windy speed in the horse race,
Reminds me of my moves between the kitchen
And the bedroom, which strengthens my feelings
That you and I are in a bind by all,
And dear horse I love you still more so much.

By (in Tamil):
Mrs. Madhumitha
In Anthology, Poetic Prism, 2015

Translated to English by Rm Shanmugam

 

குதிரையை எனக்குப் பிடிக்கும் – (2)
குதிரையை எனக்குப் பிடிக்கும்.

குதிரைவண்டியில்
பள்ளிக்கூடத்திற்குப் போவதற்கு முன்பே
சிறுமியாய் உன் நாட்டியத்தை
முதன் முதலில் சர்க்கஸில் பார்த்திருந்தேன்
குழந்தையை முதுகில் தாங்கி
போருக்குச் சென்ற ஜான்ஸிராணியின் படத்தை
பாடப் புத்தகத்தில் கண்டதும்
நானே உன் மீது பவனி வருவதாய் உணர்வு

குதிரையில் பாடிக்கொண்டே பவனி வரும்
கதாபாத்திரங்களை திரைப்படத்தில் கண்ட போதெல்லாம்
உன் மீது அன்பு நேசம் அதிகரிக்க
போர்க்களத்தில் விழும் அவலம் காண நேர்கையில்
பதைபதைப்பு உலுக்கும்

சம்யுக்தையை உன் மேல் தூக்கிச் சென்று
பிருத்விராஜன் கடிமணம் புரிந்ததையும்
குதிரையை அடக்கிய தேசிங்குராஜனின் கதையையும்
கல்கியின் கதாபாத்திரங்கள் உன்னில் பவனி வந்ததையும் அறிந்த போதும்
‘ஞானிகளுணர்வினொன்றாய்’ என்று
உன்னைப் பற்றிய கம்பனின் உவமையாலும்
உன் மேல் ஏறி வந்த மதுராவிஜய கங்காதேவியை
காவல் கோட்டத்தில் தரிசித்த பிறகும்

உன்னில் எப்போதும் பயணித்தேன்,
எப்போது உன்னை நேசித்தேன் என்பதறியாமலே.

உன் பக்கப்பார்வை மறைக்கப்பட்டு
கட்டுப்படுத்துபவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறாய்
ஆற்றல் நிறை பெண்ணுக்கோ குடும்பம் கடந்து,
சமூகப்பார்வை மறைக்கப்படுகிறது.
காற்றாய் பறக்கும் வேகம் துறந்து
சதுரங்கத்தில் உன் நகர்வு குறைவான கட்டங்களில்,
சமயலறைக்கும் படுக்கையறைக்குமான
என் நகர்வினை நினைவுபடுத்த
நானும் நீயும் ஒன்றெனும் நினைவு,
இன்னும் நம் பிணைப்புக்கு வலு சேர்க்கச் சேர்க்க

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *