மறுமலரச்சிக்கு மறுமலச்சி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மாசி 19 2047 (02.03.2016) புதன் காலை
மின்னஞ்சலாக வந்த மீட்டுருவாக்கச் செய்தி.
அஃது அழைப்பிதழல்ல.
கண்ணுக்கு விருந்து,
செவிக்குத் தேன்,
மனத்துக்கு ஒத்தடம்,
புண்ணுக்கு மருந்து.
புலமைக்குக் களன்.
06.03.2016 யாழ்ப்பாணப் பொது நூலகத்தில்
புத்தக வெளியீட்டு விழா.
இணைப்பில் அழைப்பிதழ்.
கேட்க இனிக்கும் செய்தி.
இழக்காமல் மீட்டுருவாக்கும் முயற்சி.
இருப்பதைப் பேணும் முயற்சி.
காலத்தின் பெட்டகங்கள்.
கருத்துகளின் கருவூலங்கள்.
கற்பனைகளின் சிறகுகள்.
இலக்கியத்தின் மறுமலர்ச்சி
படைப்பாளிகளின் புறாக்கூடு
எழுத்துகளின் ஏட்டுக்குவியல்.
கோப்பாய் சிவத்தாரின் தந்தையார்
முதலாகப் புலமைக் களஞ்சியங்கள்
அதுவும் ஈழம் ஈந்த களஞ்சியங்கள்
பண்பாட்டுப் பேழைகள்
பரந்து பார்த்த உள்ளங்கள்
விட்டுச் சென்ற திறன்திரள்
இலக்கிய முதுசம் என்பேனா?
மண்ணின் விளைபொருள் என்பேனா?
வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
பாராட்டுகிறேன் புகழ்கிறேன்
பணிசெய்தார்முன் தலைபணிகிறேன்
தொய்யோம் தோற்கோம் தொடர்வோம்
வளமான மனிதம் நோக்கி வளர்வோம்.
எப்படி இப்படிச் சிந்தித்தீர்கள்.
இணையத்தில் உலவவிடுங்கள்
விலைகொடுத்து வாங்குவார்கள்
அமேசன் (amazon.com) அமைப்பினருக்குக்
காந்தளகம் சென்னை வழி விற்கலாம்
சசிரேகா tamilnool@tamilnool.com
உலகம் முழுவதும் சென்றடையும்
கேட்பவர்களுக்கு இணையமுகவரி சுட்டலாம்.
கிளிநொச்சியில் காந்தளகம் விற்றுத் தருவார்கள்
கமலராணி குணசிங்கம் 0776135602
விற்றால்தான் மீண்டும் இப்பணிகள் தொடரலாம்.