திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

‘’அர்ஜுன சந்தேஹம்’’
————————————————

4d0324f9-8e4c-479f-929b-0792be16a83c

”ஓங்கி உலகளந்தோன், ஓயாத லீலையால்
தாங்கும் புறமுதுகு தாவுகிறான், -சாங்கியம்(கீதை)
சொல்வானா ! தேரோட்டும் சாரதியாய் தேர்ந்தெடுத்த
வில்வீரன் பார்த்தன் விதிர்ப்பு’’….

விதிர்ப்பு -இந்த தீராத விளையாட்டுப் புள்ளையை தேரோட்டும் புள்ளையாய் தேர்ந்தெடுத்தோமே என்று வில்லில் வல்ல வீரன்
பார்த்தன் கொண்டான் விதிர்ப்பு(நடுக்கம்)…

வேறு
————
’’கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
அன்னையின் அன்பினாலா!, அல்லது -கண்ணனே,
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு,
ஆயாசம் ஆனதா லா!’’….

”மண்ணுண்டு , மாதா மயங்கிட, மாம்பழக்
கன்னங்கள் உப்பக் கதவுவாய்க்குள், -அன்னன்டை,
உள்ள மகோன்னத உன்னதங்கள் காட்டிய,
புள்ளேபுள் ளூறும் பரம்’’….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க