Advertisements
Featuredஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி (62)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

13077391_1006164376104428_1216165247_n
127289602@N03_rவெண்மணி சிந்துஜா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.05.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (3)

 1. Avatar

  அலுப்பை போக்கும் 
  அதிகாலை 
  ஆண்டவன் அருளோடு 
  அவளின்  பயணம்…. 

  இறங்க மனமில்லை 
  இறங்கியது கால்கள் 
  சேலை வேட்டியானது 
  செஞ்சிலுவை சட்டை போட்டு 
  க ஞ்சி கலையம் தன் கண்மறைக்க 

  கடகடவென்று 
  கடல் நீரை தளங்களில் பாயிச்சி 
  கதிரவன் துணைகொண்டு 
  மடமடவெனக் 
  கோடு போட்ட வரப்பில்   
  மஞ்சள் வெயில் மணத்தோடு 
  தகதகவென மின்னும் உப்பளத்தில் 

  தாகம் மறந்து 
  தேகம் மெலிந்து 
  சோகம் குவியும் 
  சொப்பன வாழ்க்கையில் 

  உடலோடு உழற்றும் 
  உப்பு காற்றில் 
  கருவாடெனக் காயிந்து 
  திருவோடு அறியாத 
  பிள்ளைக்காக 
  தினம் தினம் வெந்து தணியும் 
  வேள்வியில் 

  உலகமே ருசித்திருக்க
  உள்ளம் உருகுதே எங்கள் 
  உயிரும் கருகுதே 
  எள்ளும் தண்ணியும் 
  இறைப்பதற்குள் 

  இறைவா 
  எங்களை மீட்டெடுக்க வாராயோ 
  இல்லை மாற்று வழி தாராயோ !
  – ஹிஷாலி, சென்னை !

 2. Avatar

  ராமன் ஆண்டாளென்ன
  ராவணன் ஆண்டாளென்ன
  ராப்பகல் பாராமல்காலில்
  கொப்பளம் வந்தாலும்பொருட்படுத்தாது
  உப்பளத்திலிருந்து உப்பை சுமந்து சுமந்து
  சுமைதாங்கியாய் போனாலும்
  அசரவில்லை என்றும் அதனால்
  உசரவும் இல்லை வாழ்க்கை முறை
  இலவசமாய் கிடைக்கும் மிக்ஸியும்
  இலவசமாய் கிடைக்கும் செல்போனும்
  இன்னபிற சாமான்களும் வந்து
  என்ன உபயோகம்அதை இயக்க காசு வேண்டாமா ?வயிற்றில்
  ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
  ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
  பெற்ற பிள்ளைகளுக்கு சோறு போடுமாஇலவசங்கள்?
  கற்ற (அரசியல்) வித்தை காட்டி
  உற்றவர்களும்,உறவுகளும்
  உல்லாசத்தை அனுபவிக்க
  உழைப்பாளிகள் வெயிலோடும்மழையோடும்
  வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலைஎன்று
  பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று !

  /

 3. Avatar

  இவர்களால்தான்…

  உருக்கும் கோடை வெயிலதிலே
       உப்பு சுமந்து பிழைக்கின்றாள்,
  வருத்தும் வறுமை போக்கிடவே
       வழிகள் தவறாய் எடுக்கவில்லை,
  தெருவில் தனியாய் இருந்தாலும்
       தீவிர உழைப்பு பிள்ளைக்கே,
  இருக்கும் இதுபோல் பெண்களால்தான்
       இன்னும் பெய்யுது மழையிங்கே…!

  -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க