உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!

3

பவள சங்கரி

முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் பெண்மணிகளும் சாதித்துள்ளனர். புத்தர், மகாவீரர், கன்பூசியசு, லாவோட்சே போன்றோருக்கும் முன்னரே இவர்களின் புகழ் பரவியிருந்தது. அதாவது உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு நம் இந்தியாதான் என்பதற்கு இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!

  1. முற்றிலும் உண்மை.!

  2. இந்த காலக்கணக்கு மிகத் தவறு கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு பிறகே உபநிடதங்கள் உருவாயின. புராணங்களை இயற்றிய வாதராயன வியாசரே உபநிடதங்களையும் இயற்றினார். அவருக்கு பின் வந்தோர் அவரை பின்பற்றி பல உபநிடதங்களை இயற்றினர். வெள்ளையர்கள் வேத நெறியை எதிர்த்துதான் சமண பௌத்த நெறிகள் தோன்றின என்ற தவறான கருத்தின் அடிப்படையில் வேத நெறி சார்ந்த எல்லா நூல்களையும் சமண பௌத்த தோற்ற காலத்திற்கு முன்னர் வைத்தனர். இப்படி உய்த்துணர்வுகளின் (inference) அடிப்படையில் காலத்தை தீர்மானிப்பது முழு வரலாற்றையும் தவறாகவே காட்டும்.

    அரசர்கள் வகுத்த போர்நெறியால் குமுதத்தில் அறம் குன்றியதை அடுத்து குமுதத்தில் அறத்தை தூக்கி நிமிர்த்தவே தோன்றியவை சமண பௌத்த நெறிகள். வேதங்கள் வேத மொழியில் இருக்க ஆரண்யக உபநிடதங்கள் எல்லாம் சமற்கிருத மொழியில் இருப்பது ஒரு முரண். சமற்கிருத மொழி வளமை பெற்ற காலம் கி. பி.3 – 4 நூற்றாண்டுகளுக்கு பிறகே.7

  3. ஸமஸ்கிருத இலக்கிய வரலாறு அல்லது மொழி வரலாறு ஆய்வு செய்யும் யாவரும் , கடோபநிஷத்  கிபி 6ம் நூற்றாண்டுக்கு பின் என சொல்வதில்லை.   ஹிந்து மரபும் அப்படிச் சொல்லவில்லை, மேற்கத்திய மரபில் பரும் இந்தாலஜிஸ்டுகளும் அப்படி சொல்லவில்லை.   உபநிஷத்களும் வேதத்தைப் போல் மனப்பாடம் செய்யப்பட்டு குரு சிஷ்ய பரம்பரையில் காது வழியாக பரப்பபட்டவைதான். அது எழுத்துக்கு போனது 7ம் நூற்றாண்டு கழித்து இருக்கலாம்

    https://en.wikipedia.org/wiki/Upanishads

    வ.கொ.விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *