கண்ணன் பிறந்தான்
ரா.பார்த்தசாரதி
இராமன் பிறந்தது நவமி தினத்திலே
கண்ணன் பிறந்தது அஷ்டமி தினத்திலே,
இராமனும், கிருஷ்ணனும் இரு அவதாரங்களே
உலகில் அநீதியை அழித்த தெய்வங்களே
ஒருத்தி மகனாய் சிறையில் பிறந்தான்
ஓர் இரவில் மாறி கோகுலத்தில் வளர்ந்தான்
சிறு வயதில் பல லீலைகள் புரிந்தான்
சிறு விரலால் மலையை குடையாகப் பிடித்தான்
ஆநிரை மேய்த்து கோபாலகிருஷ்ணன் என பெயர்பெற்றான்
மலையை குடையாக பிடித்ததால் கிரிதரன் என அழைக்கப்பட்டான்
மஹாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினான்
கீதை என்னும் வேதத்தை உபதேசித்தான்
இராமன் தன்னுடன் பலரை சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றான்
கண்ணனோ வேடன் அம்பு பட்டு தனியே சொர்க்கத்திற்கு சென்றான்