கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”என்னதவம் செய்தார் யசோதையார் ஏந்திட
தின்னதை காட்டும் திருடனை: -முன்னம்
உலகேழை உண்டுமிழ்ந்த உத்தம சேயால்
கலகாளி மாயை கலைப்பு’’….கிரேசி மோகன்….!
கலகாளி(கலகம் புரி ப்ருகிருதி மாயை காளி….பிரயோகம்தான்….சரியில்லை என்றால்)
பலகால மாயை பறப்பு’’(கண்ணன் பிறப்பில் காளி பறப்பு)….!
“பரம்பொருள்பால் காரன் ,அறம்பொருள் இன்பம்
வரம்தரும் காவலன், வீடு -தரும்அருள்
நூல்படித்தான் அன்னைக்கு(முன்பு கீதை),பால்கொடுத்த அன்னைக்கு(தாய்க்கு)
பால்வெளி(MILKY WAY) காட்டிப் பிறப்பு(கோகுலாஷ்டமி)”….கிரேசி மோகன்….