கவிதைகள்

விழித்திடு

வெ.ஜனனி

புயலைப் பார்க்காத கண்கள்
தோல்வியினை எப்படி ஏற்கும்?

வெற்றியை தள்ளி நின்று ரசிப்பதும்
கரையின் ஓரம் அலைகளை பார்ப்பதும் வீண்!

வசந்தங்களே வாழ்க்கை ஆகாது!
நீ நினைக்க, வெற்றி மாலை தோளில் சேருமோ?

வெற்றி ஒரு தவம்.. தாமதமாகும்…
ஆனால்
உன் கதவை தட்டும் ஒரு நாள்!

விழித்திடு!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    mmmmm??? ஜனனி, இந்தக் கவிதையின் மூலம் என்ன சொல்ல நினைக்கிறாய்?? புயலைப் பார்த்தால் தான் தோல்வியை ஏற்கமுடியுமா?? வெற்றி அடையும் போது அதை மற்றொருவர் போல் தள்ளி நின்று ரசிப்பது நல்லது அல்லவோ?? அலைகளையும், கடலையும் நம்பிக் கடலில் இறங்கவா முடியும்??? திடீரென சுநாமி வந்தால்??? வசந்தங்களே வாழ்க்கை ஆகாது! பருவம் மாறித்தான் ஆகணும், அதான் இயற்கை! வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரணும், அதுவும் இயற்கை. ஆனால் சொல்ல வந்த கருத்தைச் சரியாய்ச் சொல்லலையா???

    நிச்சயமா வெற்றி ஒரே நாளிலேயோ ஒரு மணியிலேயோ ஒரு நிமிடத்திலேயோ கிடைக்காதுதான். அது ஒரு தவம் போல் என்றால் விழித்திடு எதுக்கு??? குழப்பமாய் இருக்கு. அல்லது என் புரிதல் சரியில்லையா????

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க