பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14454513_1100461043341427_1026080646_n

23112939n06_rராமச்சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 0110.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (80)

  1. நேரமும் அலையும் மனிதனுக்காக காத்திருக்காது

    கடந்த காலமும், எய்த அம்பும் திரும்ப பெற முடியாது

    ஆசையே அலைபோலே, எனப் பாடினான் கவிஞசன் ,

    அலையும் ஆசையும் செயலில் ஒன்றே என்றான் !

    கடலைப் பார்த்தாலே, நெஞ்சினிலே எண்ண அலைகள் தோன்றிடுமே

    காதலியின் முத்துச்சிரிப்பினை அலையென நெஞ்சம் நினைத்திடுமே ,

    முத்துசிரிப்பும், புன்னகையும்,வெண்ணிற அலையில் தோன்றிடுமே,

    காதலி என்னை வருடியதுபோல் கடல் அலையும் அழைக்குமே !

    கடலோர காற்றும்,சூழலும், கவிதை எழுதத் தோன்றும்

    கவிஞசனின் எண்ணங்கள் என்றும் சிறகடித்து பறக்கும்

    கடல் அலைகள் கண்டு மனம் என்றும் பொங்கி எழும்

    அவன் எழுதும் கவிதைக்கு தென்றல் வாழ்த்துப் பாடும் !

    கடலோர கவிதைக்கு என்றும் சிறப்புண்டு

    கடல் அலை அருகினில் மக்கள் செல்வதுண்டு

    மகிழ்ச்சியுடன் கடல் அலையில் கால்களை நனைப்பதுண்டு

    கால் தடத்தில் மண் பெயர்ந்து தடம் பதிப்பதுண்டு !

    நிலவும், மேகமும் ஒன்றையொன்று தழுவும் காட்சி ,

    கடல் அலைகளுக்கு இதனை காண்பதே மகிழ்ச்சி

    கடற்கரையே காதலர்களுக்கு ஓர் சொந்த வீடு

    தனியே கொஞ்சு மொழி பேசிட, அங்கில்லை கட்டுப்பாடு !

    ரா.பார்த்தசாரதி

  2. கடலின் அலைகள் ஓயாது
    மனதின் எண்ணங்களின் அலைகளும் ஓயாது
    கடலின் அடிப்பகுதியில் அமைதி நிலவுகின்றது
    மனதின் அடிப்பகுதியிலும் ஆத்மா அமைதி நிலவுகின்றது
    கடல் உறங்குவதில்லை
    மனித மனமும் உறங்குவதில்லை
    கடலின் அலைகலை கட்டுப்படுத்த முடியாது
    தனி மனதின் எண்ணங்களின் அலைகளை கட்டுப்படுத்த முடியும்
    தனி ஒரு மனிதன் தன் மனதை கட்டுப்படுத்தினால்
    நெருப்பிலும் நடக்கலாம்
    ஆகாயத்திலும் பறக்கலாம் மழையையும் வரவைழக்கலாம்
    எங்கும் வெற்றி எதிலும் வெற்றியடையலாம்

  3. கடைசி வார்த்தையினை பின் வருமாறு மாற்றிக்கொள்ளவும்,

    தனியே கொஞ்சு மொழி பேசிட, காதலர்க்கில்லை கட்டுப்பாடு !

  4. கடற்கரைக் காட்சி…

    மாறி யிருப்பான் மனிதனென்று
    மீண்டும் அலைகள் கரைவந்தன,
    ஏறி யிருக்குது கணக்கினிலே
    எண்ணில் நில்லாக் குற்றங்கள்,
    நாறிக் கிடக்குது நிலமெல்லாம்
    நன்றி கெட்ட மனிதனாலே,
    மாற மாட்டான் மனிதனென்று
    மறுபடி சென்றன கடலுக்கே…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. எனக்குள் என்னை
    நம்பி இருக்கும்
    உயிர்களுக்கு
    ஏதும் நேரக்கூடாததென்று
    எத்தனை முறை
    உன்னை தூக்கி எறிவது ?
    முட்டாளே மனிதனுக்குதான்
    அறிவில்லை !
    உனக்குமா ?
    நீ மனிதனின்
    நீர் தாகம் தீர்க்க
    பிறந்தவன்…
    நான் இயற்கையின்
    வாழ்வாதாரமாக
    வந்தவன்….
    என்னில் இருந்து
    பிறந்தவன்
    புதிது புதிதாய்
    தீயவற்றை கண்டுபிடித்து
    எனைத் தீர்க்கப்பார்கின்றான்….
    என் மக்கள் என்று
    பொறுக்கமாட்டேன்..
    சொல்லி வை
    கோபம் தலைக்கேறினால்
    மறுபடியும் வருவேன்
    சுனாமியாய் !

  6. ஆழியே வாழி

    ஆதி முதல் ஆண்டாண்டு காலமாக
    ஆழியே உன்னழகு
    இலக்கியத்தின் பாடுபொருளாக
    அகத்திய மாமுனி கமண்டலத்தில்
    அடக்கிய மாக்கடலே!
    சங்கச் சித்திரத்தில்
    நெய்தல் நிலமாக வளம்பெற்ற அலைமகளே!
    அற்றை நாளில்
    கடற்கானல் சோலையில்
    நண்டுலாவும் பாதையெல்லாம்
    உயிர்ப்பித்த களவுக் காதல்
    இற்றைப் பொழுதில்
    நாகரிகக் குப்பையால்
    களவாடிப் போனதென்ன?
    காவியங்கள் பாடிய
    கடலாடு காதைகள்
    கதையாகிப் போனதென்ன?

    அன்றொரு காலத்தில்
    புண்ணிய தீர்த்தமாட
    புனிதப் பயணம்
    உன்னைத் தேடி
    இன்றைய மானிடரோ
    பிளாஸ்டிக் கழிவுகளால் உம்மை
    கரைபடுத்த தயங்கவில்லை
    சிறுமை செய்வோரிடம்
    சினத்தைச் சுனாமியாகச் சுட்டினாலும்
    உம்மை புறகணிக்கும்
    உலகுக்கோர் மாமழை
    உம்மால் தானே தரமுடியும்.

  7. உலகத்திற்கான
    நீராதாரம் எம்மிடம்
    தாகம் தீர்க்கும் “முந்நீர்” நான் அறிவீரா?
    தாவி வரும் அலைகளால்
    தாகம் கொண்டு அலைவதாய் எண்ணி
    தண்ணீர் பாட்டில் தந்தீரோ?
    மூட மானிடரே

  8. கடற்கரை அழகுதான்
    உடற்பயிற்சிக்கும்
    உள்ள அமைதிக்கும்
    உவந்த இடம் கடற்கரை

    கடற்கரை அழகுதான்
    அழகு ஆழ்கடலில்
    எழும் பேரலைகள்
    இயற்கையின் கூற்று

    பெரியவர் முதல்
    சிறியவர் வரை
    கால் நனைத்து
    கடலைகளில்
    களிப்புறுவர்

    உணவுச்சுவை
    உப்பைத் தருவது அந்த உப்பைத்தருவது கடல்
    கடற்கரை அழகுதான்

    தள்ளி நின்றால் காற்று
    அள்ளித்தருவது உப்பு
    வலை வீசினால் மீன்
    மூச்சை அடக்கினால் முத்து

    முன்னேறும் அலைகளில்
    பின்னூட்டமிட தொணும்
    விரிந்திடும் நெஞ்சம்
    சுரந்திடும் கவிதை

    இயற்கை காட்சியில்
    தோய்ந்தே
    வயப்படுவது
    வாழ்க்கை நிலை

    கழிவுகளை இட்டு
    இழிவு படுத்தினால்
    பொங்கி எழுவாள் கடல் கன்னி
    பெரும் சுனாமியாய் அதில் சிக்கி
    அனாதை ஆகும் உலகு

    கடந்த காலத்தை
    தொலைத்தவர்கள்
    கடற்கரையில்
    தேட வருவதுமுண்டு
    தன் கதைகளை
    இங்கு விட்டுச்செல்வோரிம் உண்டு

  9. தண்ணீர் பாட்டிலை கண்டவுடன் குடிநீர ஞாபகம் வருகின்றது கடலில் பயணம் செய்வதற்கு

    குடிநீர் தேவை
    மானிடரே கடல் நீரை குடிநீராவதற்கு சிந்தனை .செய் மானிடரே தண்ணீர் பஞ்சம் போக்குவதற்கு வழி .செய்

  10. அலை தந்த புரிதல் வாழ்க்கையே போராட்டமாகி வசந்தம் இனி எனக்கு கனாகாலமே சாவைத்தேடி ஒடிய எனக்கு கடல் தந்தது முற்றுப் புள்ளி கரையில் நின்ற என் கால்களை ஸ்பரித்து முத்தமிட்டது அலைகள் அலையின் அந்த ஸ்பரிசத்தில் வெடித்து சிதறியது ஒரு புரிதல் மனிதா…. கடலில் உருவாகி அலையாகி ஓயாமைல் முயன்று எழுகிறேன் இது சாதிக்க துடிக்கும் எழுச்சி கடலும் அலையும் வேறல்ல. கவலையும் வாழ்வும் வேறைல்ல. இரண்டும் பின்னிப் பிணைந்த இயற்கையே முத்து சங்கு மட்டும் வாரி வருவதில்லை குப்பைகளையும் சுமப்பது மட்டுமல்லாது பிணத்தையும்தான் விருப்பு வெறுப்பில்லாது ஓயாது ஒழியாது ஓடி வந்து கடலிலே உருவாகி ககரையைத் தொட்டதும் கரைந்து விடுகிறேன் கடலுக்குள் எனக்குள் பேதமில்லை குப்பையும் முத்தும் ஒன்றே எதையும் பதுக்கி வைப்பதில்லை கரை சேர்ப்பதே என் கடமை என்னைப்போல் ஏற்றுக்கொள் எல்லாவற்றையும் அப்பொழுது வாழ்க்கையும் வசப்படும் உன்னிடம் வசந்தங்களும் வந்து சேரும்

  11. ஏ கடலே
    அளவில்லா பரப்பும்
    அலைகளின்
    ஆணவ ஆர்ப்பரிப்பும்
    உன்
    அடையாளமாய் இருக்கலாம்

    என்றாலும்
    நெஞ்சில் ஈரமில்லார் கையில்
    நிறைந்த செல்வமாய்
    உப்பான உன் உடலால்
    தாகங்கள் என்றும் தணிவதில்லை

    ஓராயிரம் மையில்கள்
    உன் மீது ஊர்ந்து திரிந்தாலும்
    கரையோரம் கிடக்கும்
    நான் தரும்
    ஒருவாய் நீரில்மட்டுமே
    அவர்கள் உயிர்வாழ இயலும்
    உன்னைபோல்
    கூச்சலிட்டு குதூகலிக்கும்
    ஆணவ மனிதர்களால்
    அகிலத்திற்கு பயனில்லை

    என்னைப் போல்
    ஈரமுள்ள
    எளிய மனிதர்களால் மட்டுமே
    இந்த உலகம் இயங்குகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *