பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14483641_1127585357295662_1921670627_n
ரகுநாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 29.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (84)

  1. தாய்மை…

    அண்ணல் ராமன் அன்றளித்த
    அழகுக் கோடுகள் பார்த்தவற்றை
    எண்ணிப் பார்க்கும் தாயணிலின்
    ஏற்ற மிகுந்த தாய்மையின்முன்,
    கண்ணே யில்லா காமத்தாலே
    கள்ளத் தனமாய் பெற்றபிள்ளையைக்
    கண்ணிய மின்றி கைவிடும்தாய்
    காட்டும் தாய்மை தலைகுனிவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. ஈன்ற பொழுதில் ஏக்கம்.

    சி. ஜெயபாரதன், கனடா.

    தவத்திருச் செல்வமே, உனக்குன்
    தாய் தரும் முத்தமிது !
    சேய் நீ, பெண் சிசு !
    ஆண் வாரிசை எதிர்பார்த்த
    அப்பனுக்கு நஞ்சு !
    அன்னைக்குப் பொன் குஞ்சு !
    சித்தம் குளிர்ந்ததடி
    தாய் எனக்கு.
    பித்தம் பிடித்ததடி, உன்னைப்
    பெற்ற தந்தைக்கு !
    நேருவுக்குப் பெண் மகவு
    பாரதப் பிரதமர் !
    அன்னை தெராசா பெண்மணி !
    ஆத்திசூடி
    ஔவை பெண்ணினம் !
    உன்னை, என்னை,
    உலகில் ஆணைப் பெண்ணை
    உண்டாக்கி, உருவாக்கி
    உலவ விட்டவர்
    மாதர் குலம் !
    மங்கையர் குலம் !
    பங்கம் அடைந்து, மனமுடைந்து
    எங்கும், எப்போதும்,
    செய்நன்றி மறக்கப் பட்டுச்
    சாவில் தள்ளப்படும்
    பாவையர் இனம் !

    ++++++++++++++

  3. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

    அன்பினுள்ளான்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
    அன்பினில் கரைந்து நெஞ்சினில் நிறைந்து
    ஆனந்தக் கூத்தாடி பந்தத்தில் திளைத்து
    நேசமது இங்கே
    நிலமாந்தரே காண் என்று
    பேதமது மறந்து
    பாங்குடன் பழகி களிக்கும்
    பச்சிளம் அணில்கள்
    பூவுலக ஜீவராசிகள்
    நெக்குருகி நெஞ்சுருகி நேசமதை
    என்புருக நித்தம் கொண்டாடி
    மானுட தேசமது
    மறந்து போன நேயமதை
    மாக்களாகிப் போன மக்களுக்கும்
    மரித்துப் போன உறவுகளுக்கும்
    மனித நேயம் சிதைத்து நிற்கும் உள்ளங்களுக்கும்
    முன்னறிவிப்பு செய்வன போல்
    கொஞ்சி விளையாடி
    நஞ்சு உள்ளங்களை
    பிஞ்சு உயிர்கள் சலித்தெடுக்கின்றன
    இயற்கையின் பாடமது இயல்பான நேசமது
    மனித நேயம் தாண்டிய உயிர்நேயம் காணுதல்
    வாடிய உள்ளங்களை கண்டபோதெல்லாம் வாடுவோம்
    நாடியே உலகத்து உயிர்களை ஜீவிப்போம்.

  4. இறைவன் அளித்த அழகான மூன்று கோடுகள்

    இறைவன் மனித முகத்திற்கு அளித்த மூன்று கோடுகள்

    இவை எல்லாம் நிலையாமையை உணர்த்தும்நெறிகள்

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மூன்று கோட்பாடுகள்

    மனித வர்க்கத்திற்கு இன்றியமையாத வாழ்க்கை நெறிகள்

    கடமை என்பது, மனிதன் வாழ்க்கையில் ஆற்றவேண்டிய செயல்கள்

    கண்ணியம் என்பது ஓழுக்க நெறிகளை வாழ்வில் கடைபிடித்தல்

    கட்டுப்பாடு என்பது எதிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுதல்

    மனிதனே ! என் முதுகிலிருக்கும் மூன்று கோடுகளை பார் !

    மேற்குறிய மூன்று வாழ்க்கை நெறிகளையும் நினைத்துப் பார் !

    உனது கண்ணில் தெரியும் ஏக்கம் என் நெஞ்சைத் தொட்டது

    ஐந்தறிவு உள்ள நமக்கு கட்டுப்பாடு ஏது என நினைக்குது

    மரக்கிளையும் , மரமுமே நமக்கு என்றும் சொந்த வீடு ,

    ஒற்றுமைக்கும் , பகுத்துண்டு வாழ்வதற்கும் ஓர் எடுத்துக்காட்டு !

    ரா.பார்த்தசாரதி

  5. Dear Megalla Ramamurthy,

    The result of the above, (Padakavithai 84 is yet to be published.

    This is for your information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.