“ இயற்கை ”
தமிழ்த்தேனீ
ஒன்பது வழிகள் வைத்தான் உடல்விட்டு உயிர் போக
ஒரு வழியும் வைக்கவில்லை உயிர் வந்து உடல் சேர
இறைவனிடம் நான் கேட்டேன், இது என்ன ஓர வஞ்சனை ?
ஒரு கேள்வியினால் கொக்கிபோட்டேன்
அவனளித்தான் பல பதில்கள், அது எதுவும் புரியவில்லை
ஆனாலும் ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு,
ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை
உங்களிடம் சொல்லுகிறேன் காத்திடுவீர் ரகசியமே
இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமே
இயற்கையை வெற்றி கொள்ள என்னாலும் முடியவில்லை
இயற்கைதான் கடவுள் ,நான் கூட அதன் பிடியில்
தவிக்கிறேன் மீளாமல், சொன்னால் நம்ப மாட்டாய்
ஒரே ஒருமுறை தான் விதைத்தேன் ப்ரபஞ்ஜம் வளர்ந்தது
பல முறை அழித்துப் பார்த்தேன் ஒன்றும் பலனில்லை,
இனி இப் ப்ரபஞ்ஜம் நானே நினைத்தாலும் அழிக்க முடியாது
,இயற்கையை வெல்ல என்னாலும் முடியாது..
நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியுமா உனக்கு?
கேள்விகள்கேட்பது சுலபம், உயிர் வந்து உடல்
சேர ,இயற்கையை வெற்றி கொள்ள வழி எதேனும்
இருக்கிறதா ? ரகசியமாய் என்னிடமே இறைவன்
கேட்டான் என்ன பதில் நான் சொல்ல
உங்களுக்கு தெரிந்தால் ரகசியமாய் என்னிடம்
சொல்லுங்கள் …அவனிடம் சொல்லுகிறேன் நான் !!
