கவியோகி வேதம்
குழந்தையாய் இருந்தான்,
குடிக்க, தின்னப் பலவும் கேட்டான்,
விளையாடப் பொம்மை, கேம்ஸ்நோட் பேட்
காசு எத்தனை..?அறியான்;
தந்தையோ குறித்தார்,
கல்லூரிக்கு அனுப்பும் முன்;
.
டாக்டராய் ஆகு,
அதுவே உன் லட்சியம் என்றார்!
டயரியில் குறித்த அவனுக்கான
செலவிலே அவர் மனம்.!.
அவன் இன்னும் குழந்தையாய் இருந்தான்,
அவருக்காய்ப் படித்தான்..வென்றான்
செய்த செலவை அப்பன் ‘டயரியில்’- குறித்தான்.
.
வசூலிக்கும் நேரத்தில்
வக்கணையாய் வந்தது அவர்க்கே பெரும் நோய்!
முதல் நோயாளி அவர் அவனுக்கு;
அவன் காசு வசூலிக்கவில்லை..
அதுபற்றி அவர்க்கே உறுத்தல்!
சொல்லி மன்னிப்பாய் என்னும் முன்
வாய் கோணியது.
உடல் காடு ஏகியது;
வெட்டியானோ இவன் டாக்டர்
என அறிந்து பெரும் காசு கேட்டான்.
அப்பனைப் பிழைக்க வைக்கமுடியாத் தண்டனையாய்
அவனுக்கு இவன் கொடுத்தான்.
கடைசி மூச்சில் டயரி நினைவு
அப்பனுக்கு வந்தது அறியாதவனாய்..!
*************************************************************

Leave a Reply