கவியோகி வேதம்

கவியோகியாரைப் பற்றி... கவியோகி வேதத்தின் கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் விவரம்:- 1)- காயத்ரியின் காதல்..(போட்டியில் முதற்பரிசு பெற்ற குறுங்காவியக் கவியும் சொந்தப் பிரசுரம்-ஜூன்1981-இல் 2)-எளிய யோகாசன முறைகள்- 3)-வள்ளல் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் 4)-கவியோகி கவிதைகள் 5)-போகமும் யோகமும் 6)-தியானமும் யோகாசனமும் இவரது இலக்கியச் சேவைகள் + பங்களிப்புகள்;- 1966 இலிருந்து இதுவரை தமிழ் இலக்கிய உலகில் 600க்கும் மேற்பட்ட கவியரங்கம்,பட்டிமன்றம்,தனிப்பேச்சுக்கள் நிகழ்த்தியுள்ளவர். கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், அமுதசுரபி, கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் போன்ற பிரபல ஏடுகளில் 250க்கும் மேல் இவரது கவிதைகள்+ பாரதி பற்றிய பற்பல கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.. ஜூலை 2008-இல் ஃபெட்னா.. {அமெரிக்கா} நியூ யார்க்கில் கவிதை வழங்கி கவியரசர் வைரமுத்து கையால் ‘ஃபெட்னா’-விருது பெற்றார். 5000 இலங்கைத் தமிழர்களாலும் ரொம்பவும் கைகுலுக்கிப் பாராட்டப்பெற்றார். 2008இல்(ஆகஸ்ட்) கானடாவில் (Massachussets)- ‘சித்தர்களும் என் வாழ்க்கையில் யோக அனுபவமும்’என்னும் தலைப்பில் 1 மணி நேரத்திற்கும் மேல் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.. சிங்கப்பூரில் பிப்ரவரி 2008-இல்..கனடா பேராசிரியர் டாக்டர் அநந்த் அவர்கள் தலைமையில்.. ‘ சமுதாயமும் கவிஞர்களின் பங்களிப்பும் ..’ பற்றி ஒன்றரை மணி நேரம் பேச்சு நிகழ்த்தியுள்ளார். 1996 இலிருந்து (ரிசர்வ் வங்கியில் ஓய்வு பெற்றபின்) தொடர்ச்சியாக இதுவரை சுமார் 300 பேர்களுக்கு தீவிர தியானம், யோகாசனம், ப்ராணிக் ஹீலிங்க் போன்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சிகள் அளித்துவருகின்றார். சமுதாயத்தில் அனைவருமே தான் யார்? உலகிற்கு என்ன காரணத்திற்காகப் பிறப்பு எடுத்தோம் என்பதை ஒவ்வொருவரையும் உணரச்செய்வதற்காகவே தீவிர மனப்பயிற்சி கொடுத்துவருகின்றேன் என்பார் இந்த பூரண யோகியார். .. யோகியார் என்னும் பெயரில் இதுவரை பற்பல கவிதைகள், யோகா, ஆலோசனைகளை தமிழ் இணையங்களில் எழுதிவருகிறார்.