உலையிலே ஊதி உலகக்கனல் வளர்ப்பாள்!

0

 

 

கவியோகிவேதம்

 

 

நெஞ்ச உலைதனிலே- சொற்கள்

…நின்று கனல்வதற்கு

பஞ்சமே இன்றிஎன்- தாய்

.பராசக்தி கைகொடுத்தாள்!

.

சந்தப் பெரும்நிலவில்- அவளின்

…சந்நிதி கண்டுகொண்டேன்!

இந்தக் கரங்களினால்- தொழுது

… இனிய கவிபடைத்தேன்!

.

சிவனைத்தான் பாரதியும்—என்றும்

..சிறந்த ‘உலை’என்றான்!

அவனைத்தான் விஞ்ஞானி—நல்ல

.. அணுஉலை யாய்க்கண்டான்! .(Atomic Energy)

..

.( கற்பனை செய்யுங்கள்—கவிகாள்!!

..கல்-மொத்தை அந்தஉலை!)

சிவனுக்குள் சேமிப்புஉலை— அதைஊதி

சக்தியும்– செகம்செய்தாள்!

சுவைஊதி ஊதிஊதி- செகத்துள்

..சுவாரஸ்யம் கூட்டிநின்றாள்!

.

எப்பொருளும் தான்வளர- உள்ளே

..இனிய கனல்வைத்தாள்!

செப்படி வித்தையைப்போல்—வித்துள்

…. சிறந்த-உரு தேக்கிவைத்தாள்!

.

காய்க்குள் புளிப்புவைத்து- மரத்தில்

….கண்ணாகப் பாதுகாப்பாள்

தாய்க்குள் அன்புவைத்து—அவளில்

….தன்னை ஒளித்துவைத்தாள்!

.

வயிற்றுள் கனல்வைத்தாள்—பண்டம்

…. வசக்கும் திறன்கொடுத்தாள்!!..( ஜாடராக்னி)

ஒயிலாய் விசிறுமந்தக்- கடல்(உ)ள்

….ஒப்பிலாத் தீயும்வைத்தாள்!….. (பாடவாக்னி)-

..

கொடுக்கில் நெருப்புவைத்தாள்!—தப்பக்

.. கொடுத்த கவசம்அது!

வெடுக்கும் (சில?) மருமகளின்- வாயில்

..விஷக்கனல் ஏன்கொடுத்தாள்?

.

பனியில் கனல்உண்டே!—நம்மைப்

….பதைபதைக்க வைக்கிறதே!

பனித்தூள் பட்டகிளை— காய்ந்தே

…பாய்வெயிலில் நீள்கிறதே!

ஆம்!

முக்தி தரும்சிவனோ—சித்தனுள்

…மோனம் தரும்குகைதான்!

சக்தி, உலவும்அன்னை!—அவளைச்

.. சார்ந்ததே இவ்வுலகம்!

மொக்கையாய் உள்ளலிங்கம்—தவம்

… மூட்டும் பெருத்தஉலை!

சக்கையிலும் கைநனைத்தே—சாகசம்

.. .தரும்சக்தி தாய்மைநிலை!

********************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *