உலகம் என்னும் பந்தினை உருட்டுவது யார்?

0

-கவியோகி வேதம்

ஓம் சக்தி!

உலகமெனும் பந்தினை உருட்டுபவன் நானய்யா!கலகம்செய்(து) உருட்டுவது நீயன்றோ கலி-
மனிதா?

ஜீவனையும், சடத்தினையும் ஜிவ்வென்று காணும் (உ)ன்கண்
ஜீவனுள்ளே மறைந்தஎன்னைக் காணாது செல்லுதய்யா!

மனம்தந்தேன் நானுனக்கு! மதியையும் தந்துநின்றேன்!மனமிழந்தே என்னையேநீ  வசவாகப் பொழிவதுஏன்?

மனமென்னும் பெட்டகத்தில் மங்காத சுக-துக்கம்
இனம்காணா வகையினிலே கலந்து இனிதளித்தேன்!

சுகம்காணில் துள்ளுகின்றாய்! சோகத்தில்
சுருள்கின்றாய்!

முகம்பார்க்கும் ஆடியைப்போல் முறைத்தேனோ
எனைப்பார்ப்பாய்?

வாழ்வின் வகையறியா வனவிலங்காய்த் திரியும்நீதாழ்வு
வருகையிலோ, தலைபிடித்தேன் கதறுகின்றாய்?

“நல்லதுவும் கெட்டதுவும் கலந்ததுவே நம்வாழ்வாம்”-
நல்லோர் சொல்லியதை நாளும்நீ கேட்டதில்லை?

நல்லதையே மனத்துள்வை! அல்லதுவை மறந்துவிடு!நல்லோரின் இச்சொல்லை நாயகனே! ஏன்மறந்தாய்?

நல்லது வருகையிலே  ‘நான்நான்’ எனக்குதிப்பாய்!அல்லது வரின்என்னை  அரக்கன்போல்  சாடுகிறாய்!

“நல்லதுவும் கெட்டதுவும் கண்ணனுக்கே அர்ப்பித்தேன்!”-சொல்வதிது எப்போதும் பிறருக்கே சொல்லுவையோ?

மன-நிலத்துள் உறைகின்ற மகாதேவன் எனை-
உணரஇனியவனே! பிறவிகளும் எத்தனைதான்
வேண்டுமடா!?

கர்மபலன் கழிக்கஅன்றோ கனிவான பிறவிதந்தேன்!
தர்மமிது புரியாமல் சாடுவதேன் என்கண்ணா!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *