சித்ரப்ரியங்கா ராஜா

 

 

 

வாட்ஸப் செயலி அனைவர்க்கும்

வரமாய் அமைந்த ஒன்றாகும்

காணொலி கேட்பொலி படம் தன்னை

கண நேரத்தில் பகிர்ந்திடலாம்

தொலைவில் இருக்கும் நல்லவரை

அலைபேசி வழியே இணைத்திடுமே

தொல்லை கொடுக்கும் தீயோரை

தீயாய் தடையும் செய்திடுமே

நாடு கடந்து இருப்போரின்

நாடித் துடிப்பறிதல் இதனில் தான்

நலனும் அறிந்து அமைதி கொள்ள

நண்பனாய் உதவும் புலனம் தான்

அன்னப் பறவை போல் நாமும்

அல்லல் களைய வாழ்விலே

அளவாய் புலனத்தைக் கையாண்டால்

அரசன் நாமே அனைத்திலுமே.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *